இனி அட்டகத்தி இல்ல

குக்கூ பட டிரைலர் வந்தவுடன் எல்லாரும் அதிக எதிர்பார்புடன் எடுத்த அதே முடிவைத்தான் நானும் எடுத்தேன். ‘எப்படியும் ஃபர்ஸ்ட் நாள் படம் பார்த்தே ஆகணும்!’ டிரைலர்லயே தியேட்டருக்கு கட்டி இழுத்துட்டாரு ராஜூமுருகன். தினேஷின் நடிப்பை பற்றியும் மாளவிகாவின் நடிப்பை பற்றியும் எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். 
இப்படி எல்லாவிதமான ஹைப்புகளுடன் தியேட்டருக்கு சென்றதில் ஆச்சரியம் என்னவென்றால்.. குக்கூ நம் எதிர்பார்புகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்ததுதான். இப்போலாம் படம் நல்லா எடுக்குறாங்களோ இல்லையோ டிரைலர் பக்காவா எடுத்து நம்மள லூசாக்கிட்றாய்ங்க. அப்படியே யோசிங்க..ஒரு பெரிய லிஸ்ட் மனசுல ஓடும்.
படத்த பார்த்தவங்க எல்லாரும் பாசிட்டிவ் ரிவ்யு கொடுத்தாச்சு. ஒரு நல்ல படைப்பு ஏற்றுக்கொள்ள பட்டது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. படம் நல்லா இருக்கும்னு எல்லாருக்குமே தெரியும், அதனால இப்போ படம் எப்படி இருக்குன்னு பேசினா அது டூ மச் இன்ஃபோ ஆகிடும். அதுக்கு அடுத்து என்ன வருமோ அத பத்தி பேசுவோம்.
படம் பார்க்கும் போது நிறைய ஸீன்ல ‘செம்மையா நடிச்சிருக்காங்க’‘என்னா நடிப்புடா’ ‘கண்டிப்பா அவார்ட்!’‘கட்டாய அவார்டு’    
இந்த மாதிரி பேச்சு சத்தம் கேட்டுகிட்டே இருந்திருக்கும்..இனிமே பார்த்தாலும் கேட்கும். எனக்கும் அப்படித்தான் தோனுச்சு. அதுவும் கிளைமாக்ஸ்ல கன்ஃபார்மே பண்ணிட்டேன்.
இத நான் சொல்லும்போது ஒருத்தன் ‘விக்ரமோட ஐ வேற வருது. அதனால நேஷனல் அவார்ட் கிடைக்குதோ இல்லையோ தினேஷுக்கு
விஜய் அவார்ட்ஸ் கண்டிப்பா கிடைக்கும்!’

இதுல எனக்கென்ன வருத்தம்னா, இந்த வருஷமும் விஜய் அஜீத் படத்துக்கெல்லாம் பெஸ்ட் அவார்ட்ஸ் கொடுத்துட்டு.. ஸ்பெஷல் ஜூரி அவார்ட்னு ஏதாவது ஒப்புக்கு சப்பாணி அவார்ட் கொடுத்து வீட்டுக்கு அனுபிட்டா..?

இப்போவே பேஸ்புக் ட்விட்டர்லயெல்லாம் போஸ்ட்டுகள் பறக்குது.  
சந்தோஷமா இருந்த டி காப்ரியோவ ஏத்தி விட்டு கண் கலங்க விட்ட மாதிரி தினேஷையும் ஆக்கிடுவாய்ங்க போல. ரேட்டிங்காக ஸ்டார் வேல்யூவுக்காகத்தான் அவார்ட்னு ஆயிடிச்சு. அவார்ட் பத்தியெல்லாம் யோசிக்காம ஒரு விஷயம் மட்டும் நம்பிக்கையோட சொல்லலாம் தினேஷ் இஸ் நோ மோர் அட்டகத்தி. அதே மாதிரிதான் மாளவிகாவும் பின்னி எடுத்திருக்காங்க. படத்துல தினேஷூம் மாளவிகாவும் தெரியவே மாட்டாங்க தமிழும் சுதந்திர கொடியும்தான் தெரிவாங்க.             

Advertisements

முடியல!!

சில வாரங்களா ஃபைனல் இயர் ஃபைனல் செமெஸ்டெர் ஃபைனல் டூர் ஒன்னு பிளான் பண்ணி ரொம்ப கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கினோம். டூர் போனது ஆட்டம் போட்டது என்ஜாய் பண்ணது அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எவ்வளவோ மறக்க முடியாத காமெடிகள் அந்த அஞ்சு நாளுல இருந்தாலும், ரெண்டு அவுட்டோர் காமெடிகள் அமோக வரவேற்புடன் அதிக ஃபேஸ் பாம்கள் பெற்றன.

*ஷாப்பிங் என்று மைசூரின் பிசியான குறுக்கு சந்துகளில் கொஞ்ச நேரம் கால் கடுக்க நடந்தோம். என்ன வாங்குவது என்று யோசித்து பட்ஜெட் நெருக்கடியால் Cap வாங்கலாம் என்று முடிவு செய்து ஒரு கடைக்குள் சென்றோம்.
நைக் சிம்பல் போட்ட கருப்பு Cap ஒன்றை எடுத்து விலை கேட்டதற்கு நூற்றென்பது என்று கடைக்காரர் சொல்ல எங்க கூட இருந்த ஒருத்தன்
‘என்பது ரூபா.’ என்று பேரம் பேச தொடங்கினான்.
‘தம்பி அந்த விலைக்கெல்லாம் வராதுப்பா.’
‘அதெல்லாம் வரும்.’ 
‘இல்லப்பா பிரான்டெட். அடிடாஸ்ப்பா.’ என்று சொல்ல அவர் முன்னாடியே விழுந்து விழுந்து சிரித்து கடையை விட்டு ஓடிவிட்டோம்.

*சாப்பிட போன ஹோட்டலில் “FRESH JUICE AVAILABLE” என்று போட்டிருந்தது.அதை பார்த்துவிட்டு மேனேஜரிடம் ‘ஃபிரெஷ் ஜூஸ் என்ன இருக்கு?’ என்று கேட்டான்.
‘டூ மினிட்ஸ் சார். டேபிளுக்கு ஆர்டர் எடுக்க வருவாங்க.’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
டேபிளுக்கு ஆர்டர் எடுக்க வந்தவரிடம் மறுபடி ‘ஃபிரெஷ் ஜூஸ் என்ன இருக்கு?’ என்று கேட்டான் நம்ம பையன்.
வந்தவர் கொஞ்சம் யோசித்து விட்டு கையிலிருந்த நோட்டை கொஞ்சம் நோட்டம் விட்டுவிட்டு ‘பெப்சி. கோக். தம்ஸ் அப்…. எல்லாமே இருக்கு சார்.’ என்று லிஸ்ட் போட ஆணியே புடுங்க வேணாம் என்று ஒருமனதாய் இறுதி முடிவெடுத்துவிட்டோம்.             

பிரம்மன்

 ரெண்டு நாளா இயக்குனர்/தயாரிப்பாளர் சசிகுமார் பெயரை கேட்டாலே கோபம் வருகிறது. காரணம் பிரம்மன் என்ற ஒரு, பார்க்கவே முடியாத, திரை காவியத்தை நான் பார்த்தது.
சுப்ரமணியபுரத்தில் அட்டகாசமாக ஆரம்பித்த அவரது நடிப்பு பயணம் சுந்தர பாண்டியன் என்ற சுமார் படத்தின் மூலம் ஹீரோ பயணம் ஆனது. குட்டி புலி என்ற படத்தை நல்லா இருக்குன்னு சொன்னவர்கள் எல்லாம் மகான்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இப்போது கலக்கிக்கொண்டிருக்கும் டீ-ஷர்ட் போட்ட குட்டி புலிதான் பிரம்மன்.  

பிரம்மன் ஒரு முழு நீள காமெடி படம். விழுந்து விழுந்து சிரிக்கலாம்.  வயிறு வலிக்க சிரிக்கலாம்.ஹீரோ சசிகுமாரின் இன்ட்ரோ, அவரது காதல், இடைவேளை ட்விஸ்ட், நட்பு என கிளைமாக்ஸ் வரை எல்லாமே சிரிப்புதான். அந்த படத்தில் இது நல்லா இருந்துச்சு அப்படின்னு ஏதாவது சொல்லணும்னா சந்தானத்தின் டீ-ஷர்ட்டுகளைத்தான் சொல்ல வேண்டும்.அதை தவிர எதுவுமே நல்லா இல்ல.படத்துல, ஃபிளாஷ் பேக்ல சின்ன சசிகுமார், யூத் சசிகுமார், சந்தானம், சூரின்னு எல்லாருமே கருத்து பேசி ஒரு கருத்தரங்கமே நடத்துறாங்க. நம்ம டெட்லி சவுண்ட் ப்ரொடியூசர்(DSP) பத்தி சொல்லவே தேவையில்ல.அவர் அவரோட பங்குக்கு நம்மள அழிக்கிறார்.  

சுருக்கமா சொன்னா- பிரம்மன், படைத்தவன் கூட பார்க்க முடியாது!
புரியும் படி சொன்னா- பிரம்மன், பத்து பேரரசு படத்திற்கு சமம். 
படத்தின் இயக்குனர் பேரு சாக்ரடிஸ்.கொஞ்சம் கூட சிந்திக்காம இப்படி ஒரு படத்த எடுத்துட்டார். அவர், ஒண்ணு படம் எடுக்குற விதத்த மாத்தணும் இல்ல அவர் பெயரை மாத்தணும்.
‘கண்டிப்பாக நட்பு பத்தி ஒரு சிக்னேச்சர் டயலாக் இருக்கணும்’ என்று இயக்குனர்களிடம் சசிகுமார் கதறுவார் போல.சசிகுமாரின் கிளிசேவான, மொக்கையான ஒரு நட்பு டயலாக்குடன் முடிகிறது பிரம்மன். அத்தோடு நம்ம கதையும் முடிகிறது!

இதுக்கு மேல அந்த படத்த பத்தி பேசினா டைம் வேஸ்ட்.இன்னும் ஒரே ஒரு நம்ப முடியாத, நடக்க கூடாத, கொடுமையான விஷயத்தோட முடிச்சிக்கிறேன். அது என்னன்னா.. பிரம்மன் படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு ‘உலக நாயகன்’ பத்மஸ்ரீ. டாக்டர். கமலஹாசன் அவர்கள் வந்துவிட்டோமே என்று படத்தை பற்றி சிறப்பாக பேசியதுதான். ஒரு இன்டர்வியூவில் இங்கன்வீனியண்ட் ட்ரூத் (An Inconvenient Truth) என்ற அற்புதமான படத்தை ‘நல்ல படம்’ என்று பலருக்கும் அறிமுகம் செய்துவைத்த உலக நாயகனை, பிரம்மன் போன்ற ஒரு படத்தை பற்றி பேச வைத்துவிட்டார்களே என்று நினைத்தால் கோபம் இன்னும் அதிகரிக்கிறது. டேட்ஸ் ஃப்ரீயா இருக்கு என்பதற்காக இப்படி எல்லா ஆடியோ லாஞ்ச்சுக்கும் போக கூடாது கமல் சார்.               

எபிக் மொமென்ட்:
படத்தில் சசிகுமார் ‘நான் என்னிக்குமே என்ன ஒரு ஹீரோவா நெனச்சதில்ல’ என்று ஒரு இடத்தில் சொல்வார். அப்போது ‘நாங்க கூட நெனச்சதில்ல!’ என்ற ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்‌ அமோக ஆதரவு பெற்றது.  
      

அவசியமில்லை!

இன்னைய தேதிக்கு எதை எடுத்தாலும், திண்பண்டங்கள் அழகு சாதனங்கள் ஆடைகள் கேட்ஜெட்டுகள் என எதுவாயிருந்தாலும், எண்ண முடியாத அளவுக்கு வகைகள், பிரிவுகள் இருக்கின்றன. இந்த ‘சாய்ஸ்’ என்ற ஒரு வார்த்தை மேற்கத்திய சொசைட்டிக்களை அதன் மார்க்கெட்டுகளை புரட்டி போட்டுவிட்டு இப்போது உலக மார்க்கெட்டையும் வேகமாக புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
வெரைட்டிக்கள் அதிகரிப்பதால் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அதிகமாகிறது என்ற ஒரு கான்செப்டை பிரகடன படுத்தி பல கம்பெனிகள் தங்களது மார்க்கெட்டை பெரிதாக்கியத்தோடு, மக்கள் மத்தியில் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று நாம் வாழும் மல்டிபில் சாய்ஸ் உலகத்தில் மக்கள் தங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுப்பதில் சந்திக்கும் குழப்பங்களையும், தேர்ந்தெடுத்த பின்னர் சந்திக்கும் பக்க விளைவுகளையும் Barry Schwartz மற்றும் Sheena Iyengar, இருவேறு கோணங்களில் விவரிக்கின்றனர்.
அவர்கள் நாம் நல்லதென்று நினைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் அடுக்குகள் நம்முள் ஒரு அழுத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.
இந்த பாதிப்புகள் அதிகம் பேசப்படாதவை, உணரப்படாதவை.இந்த வீடியோக்களை பார்த்த பிறகுதான் நமக்கு சுருகென்று தலையில் ஏறும். ‘ஆமாம்! எனக்கு கூட அப்பப்போ தோணும்.’ என்று.   
இதனை தவிர்க்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம் இருந்தும் நம் கண் முன் வைக்கப்படும் நூற்றுக்கணக்கான சாய்ஸ்களில் பெரிதாக ஒரு வித்யாசமும் இல்லை. ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை எடுத்துவிட்டால் அவை அனைத்தும் ஒன்றுதான் என்றும், பிடித்ததை தேர்ந்தெடுப்பதில் இத்தனை அழுத்தம் அவசியமற்றது என்றும் சொல்கிறார்கள்.
இது அந்த மாடல், இது இந்த டிசைன், இட் இஸ் டிஃபரெண்ட், என்று பெருமை பேசிக்கொள்ளும் நமக்கு அவர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் அதுதான் உண்மை. வீடியோக்களை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.   

ஷீனா ஐயங்காரின் The Art Of Choosing என்ற TED வீடியோவை காண…
http://www.youtube.com/watch?v=lDq9-QxvsNU

பேரி ஸிச்வர்ட்ஸின் The Paradox Of Choice-Why More Is Less என்ற TED வீடியோவை காண…    
http://www.ted.com/talks/barry_schwartz_on_the_paradox_of_choice.html