கத்தி படம் எப்படியிருந்தது?

ஆறு மார்க் பதில்: 

தியேட்டரை பேனர்கள் முழுதாக மறைத்து விஜய் படத்திற்கான மரியாதையோடு துவங்கியது தீபாவளி.

அதற்கு முந்தினமே.. இரவு மூன்று மணி வரை கட்டுக் கம்பிகளுடன்.. கையில் டிக்கெட்டுகளுடன்.. கண்ணசராமல் இருந்தனர் ரசிகர்கள்.

மூலா மூலைக்கு பட்டாசு சத்ததுடன்.. ஆரம்பமானது கத்தி தீபாவளி.

‘இளைய தளபதி விஜய் ‘ 

என்ற பெயருக்குத்தான் எத்தனை ஆதரவு.

FDFS விஜய் படம் பார்க்குறது வேற லெவல் அனுபவம்!!

பேப்பர்கள் கிழிக்கப்பட்டு ஸ்கிரீனுக்கு அழகு சேர்த்தன. டீ-ஷர்ட்டுகளும் சட்டைகளும் கங்குலி ஸ்டைலில் சுற்றப்பட்டன.

விசில் சத்தம் காதை கிழிக்க.. DTS எஃபக்ட்டெல்லாம் தாண்டி ரசிகர்களின் ஆரவாரம் அரங்கத்தை ஆக்கிரமித்தது.

*ஆரம்ப கட்டத்துல லைட்டா டவுட்வரும்.. ஆஹா போட்ட காசு மழையில நனைஞ்ச பட்டாசு மாதிரி ஆயிடுமோன்னு. ஆனா.. தியேட்டர் விட்டு வெளிய வரும்போது நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும்.
*பாட்டுக்கு பெருசா மெனக்கடலை.. அது ஏன்னு தெரில. ஒருவேளை கதைக்கு அதிக முக்கியத்துவம் குடுத்ததால விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.
*பல டைரக்டர்கள் விஜயின் நடிப்புக்கு குடுக்காத ஸ்பேஸ குடுத்திருக்கும் முருகதாஸுக்கு நன்றி சொல்லணும்.
*அனிருத் பின்னணி இசை பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை.. காரணம் விசில் சத்தமும் கைதட்டல் சத்தமும் அரங்கத்தில் நிறைந்திருந்தது.
*அஞ்சான்ல சமந்தாவ பார்த்துட்டு இந்த மாதிரி க்ளாமர் சரிவரலைன்னு கோபமா இருந்தீங்கன்னா.. இந்த படம் பாருங்க. (இண்டெர்மிஷன்ல பாரகான் விளம்பரத்துக்கு சமந்தா வந்ததுக்கெல்லாம் செம்ம சத்தம்!!)
*விஜய் புளு பிரிண்ட் வச்சு பிளான் போடுற ரெண்டு ஸீனும் அல்டிமேட்!!
*விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாம இந்த படம் எல்லாரையும் கவரும்.
*விஜய் ரசிகர்கள ஒரு பய கேள்வி கேட்க முடியாது. All the haters close the shutters!!
*ஒரு சில இடங்களில் கண் கலங்கவும் வாய்ப்புகள் உண்டு.
*குழந்தைகளுக்கு பெருசா பிடிக்குமான்றது சந்தேகம்தான்.
*இந்த வீக்கெண்டிற்கு பிறகு ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் தியேட்டரில் குவியும்.
*ரெண்டு விஜய ஒரே ஸ்கிரீன்ல பார்க்கும்போது.. அந்தர் மாஸ்!!!!
*துப்பாக்கியை விட இது அழுத்தமான படம். அதில் சந்தேகமே இல்லை.
*காஜல்தான் துப்பாக்கில வில்லன்னு அண்ணன் RJ பாலாஜி சொன்ன மாதிரி இந்த படத்துல சமந்தா வில்லன் ஆயிடுவாங்கன்னு நினைச்சேன்.. நல்ல வேளை அழகா சமாளிச்சுட்டார் ARM.
*முருகதாஸ் ஒரு பத்து செகண்ட் வந்தாலும்.. பச்ச குத்தின மாதிரி இடம் பிடிச்சுட்டார். _/\_
*விவசாயத்துக்காக இப்படி ஒரு படம் எடுத்திருப்பதற்கு ARMகு பெரிய பாராட்டுக்கள். அவரோட இந்த முயற்சிய ஏத்துக்கிட்ட மக்களுக்கு அதவிட பெரிய நன்றி _/\_

துப்பாக்கி கத்தி மூன்று ஒற்றுமைகள்:

*Am waiting! இடைவேளை.

*பன்னிரெண்டு பேர பிளான் பண்ணி தூக்குறது.. ஐம்பது பேர பிளான் பண்ணி தூக்குறது.

*கடைசியா நான் திரும்ப வருவேனான்னு தெரியலன்னு ஹீரோயின் கிட்ட சொல்லிட்டு போறது.

ரெண்டு மார்க் பதில்:
இந்த தீபாவளி.. நம்ம தீபாவளி!!

Advertisements