கார்னர் டேபிள்

கண்ணாடிக் கதவுகள், ஏ‌சி டைனிங், கசங்காத யூனிஃபார்ம் போட்ட சர்வர்கள் இருக்கும் ஹோட்டல்களுக்கு எப்போதாவதுதான் செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள், வாங்கிய கடனை நண்பன் திருப்பிக் கொடுத்த பூரிப்பில், அது போன்ற ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தேன்.

எல்லா ஹோட்டலிலும் நம் கண்ணில் படுவது போலவே அந்த ஹோட்டலிலும் இருவர் உணவோடு உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

நான் எவ்வளவோ முயன்றும் அவர்கள் பேசிக் கொண்டது என் காதுகளை வந்தடைந்தது. சில நிமிடங்கள் மூளையின் செலெக்டிவ் ஹியரிங் திறனை என் வசப்படுத்த முயன்றேன். பின் வழக்கம் போல… தோல்வியை வரவேற்று அதில் சந்தோஷத்தை தேடத் துவங்கிவிட்டேன்.

‘காசு அப்டியே ஜூஸ்ல போட்ட ஐஸ் மாதிரி காணாம போச்சு! இந்த மாசம் தான் உண்மையான மாச கடைசி கிருஷ்ணா!’ என்றாள் அவள். சிறிது நேரம் பேசுவதை கவனித்தால் எப்படியும் கிருஷ்ணா அவள் பெயரை குறிப்பிடுவான் என்று பொறுமை காத்தேன். பொறுமை வீண் போகவில்லை…

‘இன்னும் பத்து நாள் கூட இல்ல… அப்றம் என்ன! உன்கிட்ட  இருக்கணுமே க்ருபா..?’  என்றான் கிருஷ்ணா.

க்ருபாவின் சிந்தனையில் இருந்த குழப்பம் முகத்தில் தெளிவாக தெரிந்தது. ‘என்ன கிருஷ்ணா சொல்ற..? என்கிட்ட இவ்ளோதான் இருக்கு.. அண்ட் இதெல்லாம் தான் என்னோட செலவுன்னு எழுதி வச்சிருக்கேன்!’ என்றாள் அவள்.

‘நல்லா யோசி… நான் உன்கிட்ட எய்ட் தௌசண்ட் கொடுதேன். நீ சொல்ற கணக்குப்படி  பார்த்தா ரெண்டாயிரம் உன்கிட்ட இருக்கணும்.’

‘எய்ட் தௌசண்ட் கொடுத்தியா!’ ஒரு சிறுமியை போல கேட்டாள் அவள்.

‘ஆமாம் க்ருபா…  நல்லா யோசிச்சு பாரு!’

‘ஞாயாபகமே இல்லடா! நான் தான் செலவு செஞ்சுட்டேனா?’

‘உன்கிட்ட குடுத்தத வேற யாரு செலவு செஞ்சிருக்க முடியும்?’ என்று கிருஷ்ணா விளையாட்டாய் கேட்க, அவள் முகம் வாடி

‘அச்சச்சோ… சாரிடா!’  என்றாள்.

‘ஏய்.. விடு. எப்படியும் பத்து நாள்ல  சம்பளம் கிரெடிட் ஆகிடும். சமாளிச்சுடலாம். ’

‘கிருஷ்ணா… ஐ ஃபீல் கில்டி!’

‘பரவாயில்ல க்ருபா.’

பேசாமல் அவனையே பார்த்த அவள் சில நொடிகள் கழித்து,
‘கிருஷ்ணா அந்த பணத்த நீதான் செலவு செஞ்சுட்டன்னு சொல்லேன்..  டெல் சம்திங் நைஸ் கிருஷ்ணா…!!’

‘ஹே.. உனக்கு ஞாபகம் இல்ல! அன்னிக்கு நான் உன் பர்ஸ் லேர்ந்து பணத்த எடுத்து கிழிச்சு பறக்க விட்டேனே..!? அதுதான் அந்த ரெண்டாயிரம்’ என்று கூறி அவளை பார்த்தான்.

‘தேங்க்ஸ் அ லாட் டா!!’

என்று சொன்ன அவள் முகத்தில் படர்ந்த சந்தோஷத்திற்கு காரணம் அவன் சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல என்பது அழகாய் தெரிந்தது.

அந்த அக்மார்க் ஆனந்தத்தை பார்த்த பொழுதில் அந்த கார்னர் டேபிளில் காதல் சிறு பிள்ளையாய் தவழக் கண்டேன்.

ong way to go man! பல வேடிக்கை மனிதர் போல நாம் வீழப் போவதில்லை!

Advertisements