??? ??????

என்னை சந்தோஷப் படுத்தும் பல நூறு விஷயங்களில் கல்யாணப் பத்திரிகைக்கு முக்கிய இடம் உண்டு. அப்படி சமீபத்தில் நண்பர் ஒருவர் என் கையில் சந்தோஷத்தை கொடுத்து, ‘கண்டிப்பா வந்துடு… வீக்கெண்ட்லதான் கல்யாணம்’ என்றார்.

இப்போதெல்லாம் பத்திரிகை கை சேர்ந்ததும் என்ன கிஃப்ட் வாங்கலாம் என்று யோசிப்பதற்கு முன் எப்படி மண்டபத்துக்கு போகலாம் என்றுதான் யோசிக்கிறோம். அந்த யோசனையில் பத்திரிகையை பார்த்தால்… மண்டபம் படப்பையில் இருந்தது! படப்பை எங்கிருக்கென்று தெரியாதவர்களுக்கு… அப்டியே இன்டெர்நெட்டில் தேடுங்கள். சென்னைக்கு மிக அருகில் தென்படும்!!

படப்பையை அட்லஸ்ஸில் கண்டுபிடித்தால் கூட சென்னையிலிருந்து ரொம்ப தூரமாதான் தெரியும். நாலு பேர் கூடி ரொம்ப நேரம் ஏதேதோ பேசி கடைசியில் ‘பைக்லாம் வேலைக்கு ஆகாது… சரி பாத்துக்கலாம். இருக்கவே இருக்கு டாக்ஸி’ என்று முடிவெடுத்தோம்.

********

ஒரு மீட்டிங் ஸ்பாட், அங்கிருந்து எல்லாரும் சேர்ந்து போவோம் என்று தீர்க்கமாய் முடிவெடுத்தோம். அதன் படி ஆறு பேர் ரெண்டு டாக்ஸி எல்லாம் ரெடி.

‘டேய்.. எங்க டாக்ஸி வந்துடுச்சு. உங்க டிரைவர் எங்க இருக்கார்னு கேளு’ என்றார் அந்த மூவரில் ஒருவர்.

‘பத்து நிமிஷம் ஆகும்னு காட்டுதுடா… நீங்க கிளம்புங்க.’ என்றார் எங்க கூட இருந்த ஒருவர். கொஞ்ச நேரம் காத்திருந்த பின் நாங்கள் பொறுமை இழந்து அஞ்சு நிமிஷத்தை சேமிக்கலாம் என்று மெயின் ரோட்டிற்கு சென்றோம். படப்பை வரை போறோம் என்றால், ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்! எங்களுடன் இருந்தவருக்கு டிரைவரிடமிருந்து வழி கேட்டு ஒரு ஃபோன் வந்தது. ‘டேய்… கார் பக்கத்துல வந்துடுச்சு. நான் போய் கூட்டிட்டு வந்துட்றேன். நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க’ என்று சொல்லிவிட்டு சென்றார் எங்களுடன் இருந்தவர்.

‘ரிசப்ஷனுக்கு கிளம்பி முகூர்த்தத்துக்கு போவோம் போல’ என்று முகம் சுருங்கி போனாள் உடனிருந்த தோழி.

‘புது புடவை… அரை மணி நேரம் கஷ்டப்பட்டு ரெடி ஆகிருக்க, இதுக்காகவாது சீக்கிரம் போகச் சொல்வோம். கவலப்படாத’ என்று ஜோக் அடிக்க முயன்றேன். வழக்கம் போல சிரிப்பாள் பின் தோளில் சுள்ளென்று ஆடிப்பாள் என்று நினைத்தேன்… மாறாக அவள் அதற்கு ஒரு பதில் சொன்னாள்.

அதற்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அவள் சொன்ன வார்த்தைகளும் அவள் முகத்தில் இருந்த வருத்தமும் என்னை அமைதி ஆக்கின! நல்ல வேளையாக கார் வந்தது. ‘ஹே… கார் வந்துடுச்சு’ என்று அவளை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தேன்.

அதன் பின்… ரேடியோவில் பல பிடித்த பாடல்கள். அரட்டை. சந்தோஷம். பழைய ஞாபகங்கள். தீபாவளி ஷாப்பிங் கதைகள்.ட்ராஃபிக். முடிவில்லா சிக்னல்கள். இரண்டு மணி நேர பயணம். கல்யாண மண்டபத்தை கண்டுபிடித்த சந்தோஷம். அவள் மொபைலில் படப்பை சென்றடைந்ததும் இன்டர்நேஷனல் ரோமிங் என்று நோட்டிஃபிகேஷன் காட்டியது. இன்றைய ஹைலைட் இதுதான் என்று சொல்லி நாங்கள் சிரித்தது. மேடையில் சத்தம் போட்டு ஃபோட்டோ எடுத்தது. பற்கள் ஜொலித்த செல்ஃபிக்கள். பிரமாதமான சாப்பாடு. நான் மிகவும் ரசித்த ரசம் சாதம். ‘மோர் ட்ரை பண்ணு செம்மயா இருக்கு’ என்று நண்பர் ஒருவர் சொல்லி சாப்பிட்ட மோர் சாதமும் ஊறுகாவும். பந்தியில் நாங்கள் சாப்பிடும்போது இரண்டு முறை பவர் கட் ஆனது. ஏதோ காலேஜ் ஃபங்க்ஷன் போல பாசுந்தி பத்திரம் என்று நாங்கள் சத்தம் போட்டது. எல்லாம் கடந்தும் அவள் சொன்ன வார்த்தைகள் என்னை கடந்து செல்லவில்லை.

அடுத்து என்ன! நாளைக்கு பார்போம். ஃபோட்டோஸ் அனுப்பு. நீ எங்க போற? போனதும் மெசேஜ் பண்ணு. சாப்பாடு சூப்பர்ல? நான் போய் அவங்க கிட்ட சொல்லிட்டு வர்றேன். இப்படி எல்லாம் சூழ்ந்திருந்தும் அவள் மூன்று மணி நேரத்திற்கு முன் சொன்ன… ‘இப்போலாம் புடவை கட்டிட்டு ரோட்ல நிக்கவே பயமா இருக்கு. எங்க எவனாவது ஐட்டம்னு நெனச்சிடுவானோன்னு…..!!!’

இதில் எதுவும் கருத்து சொல்லும் விருப்பம் எனக்கில்லை… படிக்கும் ஒவ்வொருத்தருக்கும் கேள்வி, ஆச்சரியம், கோபம், குழப்பம், பயம்னு ஏதோ ஒண்ணு தரும்னு நினைக்கிறேன் அதுக்காகத்தான் இந்த பகிர்தல்!

Advertisements

Pen Paper Relationship – ஓர் அறிமுகம்

விளக்கம் –

சிங்கிள், கமிட்டட், காம்ப்லிகேடட், லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப், ஓபன் ரிலேஷன்ஷிப் அது இது என்று எதிலும் சேராத புது வகை ரிலேஷன்ஷிப் இந்த PPR. அவசரத்தின் காரணமாகவோ, விரக்தியின் காரணமாகவோ இல்லாமல் இன்றைய இளைஞர்களின் அவசியமுணர்ந்து வகுக்கபட்டது இந்த PPR. பலரும் இதனை பற்றி பேசியிருப்போம், அனுபவித்திருப்போம் இருந்தாலும் பெயர் சூட்டி, இலக்கணம் சுட்டி, அருமை பெருமை சொல்வது இதுவே முதல்  முறை.

********
PPR – இவ்வகை ரிலேஷன்ஷிப்பில் முயற்சியும் விருப்பமும் ஒரு முகமாய் இருக்கும். தற்போதைய நிலவரத்தில் கமிட்டட் என்ற ஸ்டேட்டஸ் நிலைப்பதை விட PPRதான் நீண்ட காலம் நிலைக்கிறது.

PPR ஒரு தலை காதலுக்கு ஒரு படி மேல். கமிட்டடுக்கு ஒரு படி கீழ்.

கமிட் ஆவதற்கான அனைத்து அறிகுறிகளும் இதில் உண்டு… ஆனால் மொத்தமும் உங்கள் கையில்!

பெயர் காரணம் – பேனா. பேப்பர்.

ஒரு பேனாவிற்கும் பேப்பருக்கும் இடையே உள்ள உறவானது பேனாவின் முயற்சிகளால் மட்டுமே நீளும்.

பேனா – காதல் உணர்வுகள்/எண்ணங்கள்/குழப்பங்கள் நிறைந்த பெண்/ஆண்.

பேப்பர் – காதல் உணர்வுகள்/எண்ணங்கள்/குழப்பங்கள் தந்த பெண்/ஆண்.

மை – காதல் உணர்வுகள்/எண்ணங்கள்/குழப்பங்கள் கூடவே கொஞ்சம் ஆர்வம் + ஆர்வக் கோளாறு + கிறுக்குத்தனம் + ஓவர் கான்ஃபிடன்ஸ் + …………….

************

பேனா சொல்வதை பேப்பர் எடுத்துக்கொள்ளும், பேனா தொடர்பில் இருக்கும்வரை வார்த்தைகள் விழும். பகிர்வுகள் இருக்கும். ஆனால், பேனா நீங்கினால்… கொஞ்சம் யோசித்தால், அந்த நேரத்தில் பேப்பர் எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுப்பதில்லை. அந்த இடைவெளிகள் மையெனும் உணர்வில்லா வெள்ளை இடைவெளியாய் இருக்கும்.

பேனா பேசிய உணர்வுகள்தான் பேப்பரிடம் இருக்கும். பேப்பருக்குப் பேனா மீதான காதல் உணர்வுகள் இருப்பதில்லை. சாஃப்ட் கார்னர் என்பார்களே அது மட்டும் ஒரு ஓரமாய் இருக்கும். அதனால் பேனா விலகியிருந்தாலும் இடைவெளி நீண்டாலும், பாதிப்புகள் எதுவுமின்றி பேப்பரானது மௌனம் சாதிக்கும்.

ஆனால், பேனா பாவம். காதல் உணர்வுகளால் நிரப்பப்பட்டு ஒரு வித அன்புச் சாபம் சுமந்திருக்கும். அதனால், வார்த்தைகள் முடிந்த தருணத்தில்  பேப்பரிடமிருந்து ஏதாவது எதிர்பார்த்து, கொஞ்சம் காத்திருந்து பின் மறுபடி அதுவே முதல் அடி எடுத்து வைத்து அடுத்த வார்த்தை எழுதும் – உணர்வுகளை பரிமாறும்!

குறிப்பு – விருப்பமில்லை என்றால் உதரித்தள்ளுவதை விட்டுவிட்டு ஏன் தேவையின்றி ஒருவரை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்… இந்தக் கேள்விக்கு பல பேப்பர்கள் சொல்லும் பதில் – ‘என்னால அவன்/அவள் வருத்தப்பட வேண்டாமேன்னு பாக்குறேன்’ என்பதாகத்தான் இருக்கும். இதெல்லாம் யோசிக்காமல் இருந்தால் PPR வலிக்காது. யோசிக்காதீங்க!

PPRல் கவனிக்க வேண்டியவை–

  • நாம் சிங்கிள் என்ற உண்மையை சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் எவரும் நம்ப மாட்டார்கள்.
  • இது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. உதாரணம் – மெசேஜ் எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம், ஆனால் பதில் எதிர்பார்க்கக் கூடாது.
  • குழப்பங்கள் நிறைந்தது. உதாரணம் – ‘எனக்காக முழிச்சிருக்கியா..?’ என்ற கேள்விக்கு ‘ஓகே..’ என்று பதில் வரும். ஆனால், அறிகுறி எதுவுமின்றி மெசேஜ்களின் வரவு நிற்கக்கூடும் . ஆனால், மறு நாள் பேசும்போது சகஜமாக பேசுவார்கள். நேற்றை பற்றிய கேள்விகள் பாதிப்பு ஏற்படுத்தும்.
  • வருவதை வைத்துக் கொண்டு சந்தோஷம் தேட நேரும்.
  • மெசேஜ்களில் கொஞ்சம் எல்லை மீறலாம் பின்பு மறந்திட வேண்டும்.
  • ரிலேஷன்ஷிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் ஒரு இண்டர்ன்ஷிப் போல அமையும் வாய்புகள் அதிகம்.
  • இவையனைத்திற்கும் மேல் ஒரு முக்கியமான நல்ல விஷயம் என்னவென்றால்… இதில் ஒரு நல்ல கம்ஃபர்ட் லெவல் இருக்கும்.
  • அதனால், PPRக்குப் பின் PPRக்கு முன் இருக்கும் மனநிலை, அவரவர் மனப்பக்குவத்தை பொருத்தது.

அப்படியென்றால் இது ஒரு தலை காதல்தானே என்று யோசிப்பவர்களுக்கு…

இது ஒரு தலை காதல் அல்ல –

PPRல் நாம் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் ஒரு ரியாக்ஷன் இருக்கும். பல நேரங்களில் பாசிட்டிவாகவே அமையும். இன்றைய காலத்தில் ஒரு தலை காதல் என்பது குறைந்துவிட்டது, நன்றாக கவனித்தால், பல ஒரு தலை காதல்கள் PPR ஆகிவிடுவது தெரியும்.

ஒரு தலை காதலில் நாம் செய்வது 20% என்றால், PPRல் நிலைக்கும் நேரத்தில் நம் செயல்கள்தான் திடமான அஸ்த்திவாரமாக அமையும். PPR பாஸ்போர்ட் அல்ல VISA போன்றது. அவ்வப்போது எக்ஸ்பைரியை நீடித்துக் கொள்ள வேண்டும். கவனத்திற்கு – எக்ஸ்பைரியை நீடித்துக் கொள்ள வேண்டும்! எப்பொழுது வேண்டுமானாலும் இல்லையென்றாகலாம். அதற்கு மட்டும் மனதை தயார் செய்துகொண்டால் PPR ஒரு நல்ல அனுபவமாக அமையும். நினைவுகளை அள்ளித்தரும், புன்னகைகள் பரிசளிக்கும், குழப்பத்தில் ஆழ்த்தும், கை கொட்டி சிரிக்கும், கனவுகளில் கால்பதிக்கும், மொத்தத்தில் மனதில் அழியா கையெழுத்திட்டு பிற்காலத்தில் நினைத்துப் பார்க்க பொழுதுகள் தரும்.

மறுபடியும் சொல்கிறேன், கமிட் ஆவதற்கான அனைத்து அறிகுறிகளும் இதில் உண்டு… ஆனால் மொத்தமும் உங்கள் கையில்!

வருங்கால வார்னிங்க் – PPR பீக்கச்சு போன்றது அது ராய்ச்சுவாக எவால்வ் ஆகும் வரை ஆர்வம் வானம் தொட்டிருக்கும். ஆனால், சில நேரங்களில் பீக்கச்சுவாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றும் நேரங்கள் வரலாம்.

நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன். பார்த்து நடந்துக்கோங்க. வாழ்க வளமுடன்!

Hope you enjoyed reading about PPR. Some of you may right now be in PPR or You would have experienced PPR in your life. You are free to share your PPR experiences in the comments. Or if you have anything to say personally you can message me here.