சக்சஸ்ஃபுல் எனக் கேட்ட நண்பன்!!

ஃபோட்டோகிராஃபியில் அவனுக்கு ஒரு பெரிய மேடை கிடைத்தும் போக முடியாத போது என்னை அழைத்துப் பேசினான். வருந்தினேன். மகிழ்ந்தேன், என்னால் முடிந்த ஆறுதல் வார்த்தை சொல்லிவைக்காமல், இன்டர்நெட்டில்  ஃபோட்டோகிராஃபி சம்மந்தமான வேறு சில செய்திகள் இருப்பது பற்றியும் அதில் உள்ள வாய்ப்புகள் பற்றியும் பகிர்ந்தேன்.

2015 ஜனவரி 3

இந்தியன் ஏர் ஃபோர்ஸ் அவனை அழைத்தது. ரயில் ஏறினான். பயணம் தொடங்கும் முன் சந்தித்திப்பதாய் பேச்சு. ஆனால், முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருந்தது. நேரில் பார்த்து சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், நாங்கள் சந்திக்காத காரணத்தால் அதை அவனுக்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு வராமலேயே போய்விட்டது. விஷயம் தெரிந்திருந்தால் ஆர்பாட்டம், ஓவர் டோஸ் ஆனந்தம், தேவையில்லாத டிராமா எதுவுமில்லாமல் அழகாக ஏற்றுக்கொண்டு, அடுத்தது என்ன என்று கேட்டிருப்பான்.

ட்ரைனிங் அகாடெமி, தலையணை அளவு கோர்ஸ் மெடீரியல், வாட்சப்பில் DND ஸ்டேட்டஸ் இப்படி எதுவும் இல்லாமல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் தேர்வில் நிதானமாய் தேர்வடைந்தான். I felt proud. அவன் கதைகள் தெரியாத என் நண்பர்கள் இல்லை.

2015 டிசம்பர் 27,

நாங்கள் சந்தித்தோம். வழக்கமான கிண்டல்கள், திட்டுகள், விசாரணைகள், சமீபத்திய சினிமா பற்றியெல்லாம் பேசிவிட்டு கிட்டத்திட்ட ஒரு வருடம் கழித்து எனக்கு வேலை கிடைத்தது பற்றியும் அடுத்தது என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றியும் பகிர்ந்தபோது நிச்சயம் சந்தோஷப் பட்டிருப்பான்.

அவனிடம் நிறைய கதைகள் கேட்டேன். ட்ரைனிங் பற்றி, அதன் அனுபவங்கள் பற்றி பல கதைகள் சொல்லிவிட்டு…

‘ட்ரைனிங் முடிஞ்சிடுச்சு. ட்ரைனிங்ல பெர்ஃபார்மன்ஸ் வச்சு எனக்கு ஃபைட்டர் அலகேட் பண்ணிருக்காங்க…’ என்றான்.

I felt proud!

2016 ஜனவரி 3,

என்னை காலையில் எழுப்பியது அவனது ஃபோன் கால்.

‘தூங்கி எழுந்துட்டியா?’

‘இப்போதான்’

‘நான் கிளம்புறேன்டா.’

‘சூப்பர்டா. எங்க இருக்க இப்போ?’

‘ஏர்போர்ட்ல…’

‘அடுத்து எப்போ?’

‘ஜூன் மாசம் வருவேன்னு நினைக்கிறேன். அப்போ பார்ப்போம்’

‘கண்டிப்பா டா…’

‘டேய்! இந்த முறை வந்தப்போ அதிகமா ஃபோன் கால் பண்ணது உனக்குதான்.’

‘நிஜமா சொல்றியா இல்ல சும்மா டிராமா டயலாக் மாதிரி ஏதாவது சொல்றியா!’ என்று கிண்டலாய் கேட்டேன்.

‘செல் ஃபோன் சொல்லுதுடா கால் லாக்ஸ் (Call Logs) வச்சு’

‘உனக்கு யூனிஃபார்ம் குடுத்துட்டாங்களா?’

‘குடுத்துட்டாங்கடா முன்னாடியே.’

‘அப்படியா!! சரி ஓகேடா. பார்ப்போம். ஜூன் மாசம்.’

‘கண்டிப்பா டா!’

இங்கு நான் வார்த்தைகளை சேர்த்து கதை எழுதும் நேரத்தில் அங்கு அவன் நாம் எவரும் சந்திக்காத அற்புதமான அனுபவங்களோடு சந்தோஷமாய் சண்டையிட்டுக் கொண்டிருப்பான்.

அவன யூனிஃபார்ம்ல பார்க்கணும். 😀

இந்த விஷயத்துல நான் அவனுக்கு எந்த உதவியும் செஞ்சதில்ல. அவன் இப்போ இந்தியன் ஏர் ஃபோர்ஸ்ல இருக்கிறதுக்கு நான் எந்தவிதத்துலையும் காரணமில்ல. இருந்தாலும் ‘டேய்! தெரியுமா… ஹரி கிருஷ்ண ராவ் இப்போ ஃபைட்டர் ஜெட் பைலட்.’ என்று ரெண்டு நாளில் நான் பார்த்து பேசிய எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்.

அவன் வெற்றியும் சந்தோஷமும் எனக்கு ஊக்கமளிக்கிறது, மகிழ்ச்சி அளிக்கிறது.

சான்றோன் எனக் கேட்டத் தாய் எப்படியோ அப்படியே

சக்சஸ்ஃபுல் எனக் கேட்ட நண்பன்!!

Advertisements