உடைந்த ஏனி.
தலைக்கு மேல் மூங்கில் கழிகள்.
அட்டை செட்டுகளில் மட்டை வீடுகள்.
இரும்பில் படிகட்டுகள், இடையில் வரைந்த மனல் திட்டுகள்.
கோவில் கோபுரம்.
முன்னொரு காலத்துப் பெயர் பலகைகள்.
கார்ட் போர்டு கடவுள்.
கலியுகத்தில் காணாமல் போன அமைதி.
லைட் கன்சோல்.
பெரிதாய் பேசப்படாத மியூசிக் கன்சோல்.
பல வண்ண ஸ்க்ரீன்கள்.
ட்றாப்பிங் ரோப்ஸ்.
மூவிங் லைட்ஸ்.
ஆடியன்ஸுக்கான முதல் பெல்.
ஆர்டிஸ்டுகளுக்கான மூன்றாவது பெல்.
முதல் முறை பயங்கள்.
உடனிருக்கும் உருதுனைகள்.
ஆல் தி பெஸ்ட்டுகள்.
ட்றஸ் சேஞ்ச் அவசரங்கள்.
ப்ராப்பர்ட்டி ப்லெஸ்மெண்ட்.
சரியான நேரத்தில் கை தட்டல் சத்தம்.
அடக்கி வைத்த தும்மல்.
சைலண்ட் மோட் சிரிப்பு.
ஸ்பாட் இம்ப்ரூவ்மெண்டுகள்.
தவறுகள். திருத்தங்கள்.
உலகறியாத உண்மைகள்.
பாராட்டுகள் பார்த்திடா உதவிகள்.
புது வார்னிஷில் பல பலக்கும் போடியம்.
கலைஞர்களின் கடைசி வரிசை பாலமான மைக் செட்டுகள்.
எதிர்காலத்தின் நம்பிக்கைகள்.
எல்லை மீறும் பாஸிட்டிவிட்டி.
எல்லையில்லா க்ரியேட்டிவிட்டி.
இவையனைத்தும் தன்னோடு கொண்டு என்றும் சந்தோஷம் சேர்க்கும் இளமை மாறாத மேடை…
– நம் பயத்தை தொலைக்கும் ப்ளாக் ஹோல்.
– நாம் ஆறியாத நம்மை, நமக்கு அறிமுகம் செய்யும் கண்ணாடி.
– விலைமதிப்பில்லா சுகபோதை.
– ஆயிரம் உண்மைகள் கற்றுத்தரும் ஆன்மீகம்.
– கடைசி வரிசை, சபையின் எல்லை. உலகின் எல்லையோ உயர்வின் எல்லையோ இல்லை! என்பதை உணர்த்தும் “Man Made” போதி மரம்.
அது கற்றுக்கொடுக்கும் உண்மைகளில் டிஷ்யூ பேப்பரில் எழுதி மேக்கப் ரூமில் வைத்துவிடக்கூடாதது ஒன்றுதான்…
Anything on the மேடை may die, But not the மேடை!
குறிப்பு –
சமீபத்தில் ஒரு மேடை நாடகத்தில் நண்பர்களுக்கு உதவிய போது மேடையின் முதுகிற்குப் பின் நின்று அதன் முழுமை ரசித்ததன் பயனாய் இந்தப் பதிவு.
I’m happy that I assisted my Dosth Bada Dosth, Theatre Artist Anandha Krishnan in his debut stage play because of whom I’ve written something for the love of my life, The Stage.
Like this:
Like Loading...