கண்ணம்மா என்றழைத்து..

காற்று வெளியிடை

கண்ணம்மா

என்னை ஆசை நசுக்குதடி!

காத்துக் கிடக்கிறேன்

கண்ணம்மா

இங்கு காற்றும் கசக்குதடி!

நேற்று நினைவினிலே

கண்ணம்மா

உந்தன் பாடல் கரையுதடி!

மாற்று வழியினிலே

கண்ணம்மா

எந்தன் காவல் உடையுதடி!

தோற்று தொலைந்திடவே

கண்ணம்மா

எந்தன் நெஞ்சம் அலையுதடி!

கீற்றுக் கதிரதுவும்

கண்ணம்மா

உந்தன் முன்னே வளையுதடி!

Advertisements

Kaatru Veliyidai & The One Word Magic! 

It’s dark screen!

And there comes the name..

A MANIRATNAM FILM

You hear a verse of Bharathi!

Followed by a breathtaking visual that sets the first glimpse of the many more magic to come!

You go awe for every single aspect you see and hear!

But..

While everyone is raving about the visuals and music. I wonder how no one noticed the way a single word that comes in a teaser of 47 seconds tells a story!

Look at the way they have played with ‘வருவான்’ used as ‘வான்.. வருவான்’

The very idea of using this word and stressing வான் surprised me.

வருவான் & வான் – Love & Space!

காதல், காற்று வெளியிடை!

She peeps out of the window.. looks to her right. And in the next frame.. You see him walking to the left. To her.. Meeting her belief! வருவான்!

By what we have heard as of now, Karthi plays the role of a Fighter Pilot. Have they stressed வான் (Space) to represent this?

Are they trying to establish a relationship in the plot – love & space with just
the one word -வருவான்!?

May be!

May be not! 🙂

But if so.. please take me to ManiRatnam. Wish I get to know how the magic is spelled every single time! Can’t get enough of the brilliance and magic he could elicit out of his crew!

P.S. வான் வருவான் –

  • வான் நோக்கி வருவான்!
  • வான் விட்டு வருவான்!

இது போன்ற அர்த்தங்களில் எடுத்துக்கொள்ள முடியுமா என்று எனக்கு சந்தேகமிருக்கிறது!

(As I look up for him in the sky.. Will he be there? Will he come here from the sky?

Can this usage mean something like this!)

I am not sure whether I am getting a bit too much with this decoding. But there’s nothing wrong because it is A MANIRATNAM FILM

P.P.S – Thank you Suhansid Srikanth for helping me in completing this post. It’s an honor to give you The Post Of Chief Editor for this post! 😛

Suhansid blogs at..

http://suhansidh.blogspot.in/

Do check it out for some very interesting writings!

3 Reasons Why Adhey Kangal (2017) Is A Well Written Movie!

கண் பார்வை வரவழைக்க முடியும், காரணம்  –
‘இவருக்கு, பார்வை திரும்ப வழியிருக்கு. ஒரு ஆப்பரேஷன் பண்ணா போதும். ஏன்னா இவரோட கண்ணு வெளிச்சத்துக்கு ரெஸ்பாண்ட் பண்ணுது’
பதினைந்து  வயதில் கண் பார்வையிழந்த ஒருவருக்கு இப்போ கண் பார்வை வரவழைக்க வாய்ப்பிருக்கு என்று இப்படி டாக்டர் சொல்வதற்கு பல படங்களில் காரணங்கள் சொல்லியிருப்பார்கள். இது ஒன்றும் புதுசில்லை, இருந்தாலும் இப்படி அவர்கள் சொல்வதற்கு முன்னால் ஒரு சீனில் பேஷன்டின் கண்ணுக்கு கார் ஒன்றின் ஹெட்-லைட் வெளிச்சம் படும் பொழுது ஒரு க்ளோஸ்-அப் வைத்து காண்பித்திருப்பது சிறப்பு!
ஆனந்த விகடன் ஸ்டூடெண்ட் ரிப்போர்ட்டர்ஸ், எதற்கு – 
பல ஊர்களில் பல நபர்களை பின் தொடர வேண்டும். அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். நம்மால் மட்டும் முடியாது. என்ன செய்யலாம் என்ற ஒரு முக்கியமான கட்டிடத்தில், ஜனனி ஐயர் ஆனந்த விகடனில் வேலை செய்வதால் அவர் மூலமாக ஒவ்வோரு ஊரிலும் உள்ள ஆனந்த விகடன் ஸ்டூடெண்ட் ரிப்போர்ட்டர்ஸை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் காரியத்தை முடிக்க முடிவு செய்வது சிறப்பு!
என்னை ரொம்பவும் கவர்ந்தது இந்த முடிவு! ஒரு ஹீரோயின் புத்திசாலித்தனமா யோசிப்பது என்பது எப்போவாதுதான் பார்க்க முடியுது. அதனால பார்க்கும்போதே புகழ்ந்துவிடுவது நல்லது!
வேகமான கோபக்காரி, அவள் – 
இந்த வேகமான கோபக்காரி என்கிற கேரக்டர் டிஸ்க்ரிப்ஷனை
– SUPER WOMAN
–  GO AHEAD
போன்ற அவருடைய டீ-ஷர்ட் வாசங்கங்கள் வைத்தும்,
நண்பன் ஒருவனுக்கு ஒரு ஸீனில் ரத்தம் வழியும் பொழுது, பஞ்சுக்கு பதிலாக சேனிட்டரி நேப்கினை பையிலிருந்து  சட்டென்று எடுத்து உபயோகிப்பது வைத்தும் காண்பித்திருப்பது மிகச்சிறப்பு!
திமிர், தைரியம் எல்லாவற்றையும் சொல்லாமல்  தெளியவைத்திருப்பது இவற்றில்!
Barbie Doll வேஷத்தில் பச்சோந்தி நீ என்ற பாடல் வரி அம்சமாக பொருந்தியிருப்பதற்கு இது போன்ற சிறு சிறு நுணுக்கங்கள் உதவியிருக்கின்றன!
A very good attempt by the whole team! Happy for you guys!