Did A.R.Rahman show Kaaviya Thalaivan to Majid Majidi!?

‘கொண்டாட வேண்டிய ஒரு தமிழ்ப் படம்னு சொல்லலாம்!’ படம் பார்த்துவிட்டு செல்ஃபீ வீடியோவில் விஜய் பாராட்டினார்!

மூனாவது வாரம் ஓடினாலே சூப்பர் ஹிட்மூனாவது வாரம் சரக்கடிச்சுட்டு   படம் பாக்குறோம்!’ தெளிவான ஒரு புன்னகையோடு கூறியிருக்கிறார்
இயக்குனர் வசந்தபாலன்!

பல மேடைகளில் ‘இந்தப் படம் நிறைய பேர போய் சேரணும்.’ ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார் சித்தார்த்!

நான் இந்தப் படத்த கண்டிப்பா மஜீத் மஜிதிக்குப் போட்டு காமிப்பேன்!’ பெருமையாகச் சொல்லியிருக்கிறார் .ஆர்ரகுமான்!

காவியத் தலைவன்… தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான திரைப்படம் என்றுசொன்னால் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இருக்கலாம். அதனால், காவியத் தலைவன்… என் வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம்!

ஒரு நடிகனின் எல்லையை, என் ஆசையை ஒரே வசனத்தில் எழுதி ஆணி
அடித்திருப்பார்கள்.

‘கைத்தட்டல்ல என்னயிருக்கு! எவனும் என் நடிப்ப பார்க்க வேண்டயதில்ல,
நான்அங்க போயிட்டேன்னு எனக்கே தெரிஞ்சா போதும்!’ என்று காளியப்பா பாகவதர் தன்விருப்பத்தை முழு கர்வத்தோடும், கண்ணியத்தோடும் சொல்வதை தியேட்டரில்
கண்ட  அந்த நொடி வாழ்க்கைக்கும் என்னை நீங்காது!

இறுதியில்,  ஒரு மேடை நாடகத்தின் வாயிலாக ஒருவன் நல்ல நடிகன் என்று அவை கண்டறிய, அவனை வெறுக்கும் ஒருவன் உணர, கர்ண மோக்‌ஷ நாடகத்தில் அர்ச்சுனனுக்கு ஒரு பாடல் வைத்து,
படத்தில் இருவருக்கிடையில் இருக்கும் பகை,வன்மம், கோபம்,
நடிப்பின் மீதிருக்கும் பற்று, நடப்பில் இருக்கும் நம் வாழ்வு இப்படி எல்லாவற்றையும் பேசியது புத்திசாலித்தனத்தின் உச்சம். இப்போதுநினைத்தாலும்
‘எப்படி இந்த மனுசன் யோசிச்சிருப்பார்!’ என்று
நான் வியக்கும் காட்சியது!                           தியேட்டரை விட்டு வெளியே வந்த போது ஒரு புதுவித பெருமையோடு
வெளியேவந்தேன்.

ஏன் இந்தப் படத்தைப்பற்றி பஸ் ஸடாண்டில், ஃபேஸ்புக்கில்,
ஆஃபீஸில் யாருமே பெரிதாய் பேசவில்லை என்று எனக்குப் புரியல.
ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும் எனக்கு இந்த யோசனை கோபம், ஆதங்கம், ஆச்சரியம், விரக்தி என பல வண்ணங்களில் வந்து போகும்.

நேற்று,

Inline image 1

சித்தார்த்தின் இந்த ட்வீட்டும், பத்து மாநில விருதுகள் வென்ற செய்தியும் என் நியூஸ் ஃபீடில் இந்த வருடத்தின் எக்ஸ்ட்ரா சர்க்கரை செய்திகள்!

தலைவன்கோட்டை காளியப்பா பாகவதர்,
மேலச்சிவில்பேரி கோமதி நாயகம்பிள்ளை,
ஆசான் சிவதாச சுவாமிகள்… மூவரையும் மறக்க முடியாத ராஜபாட்டாக்கிய வசந்தபாலனுக்கு நன்றிகள். முக்கியமாக, சித்தார்த்தின் மீது நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளையும் திணித்த வசந்தபாலனுக்கு என் சார்பில் எக்ஸ்ட்ரா நன்றிகள்!   

இப்போதும், ஏ.ஆர். ரகுமான் இந்தப் படத்தை மஜீத் மஜிதியிடம் காட்டினாரா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டுமெனக்கு! சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் முதல் கேள்வி இதுவே!