Feeling Lonely? Here Are Five Songs That Can Change That

இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு
விலகி விடும்,
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று
விளங்கி விடும்.
புதுப்பேட்டை படத்துல ஒரு நாளில் பாட்டுல என்னதான் இப்படி சொல்லியிருந்தாலும், தனிமையில இருக்குற மனசுக்கெல்லாம், தனியா இருக்கோம்னு நெனச்சுட்டிருக்க மனசுக்கெல்லாம் ஒரு ஏக்கம் இருக்கும். நமக்குன்னு யாருமே இல்லையான்னு ஒரு பயம் இருக்கும். அந்த ஏக்கத்த, அந்த பயத்த இல்லாம பண்ற சில பாடல்கள் இருக்கு.

யாரோ உச்சிக்கிளை மேலே (படம் – தரமணி | பாடலாசிரியர் – நா. முத்துக்குமார்)

 

யாருமின்றி யாரும் இங்கு இல்லை
இந்த பூமியின் மேலே,
தன்னந்தனி உயிர்கள் எங்கும் இல்லை.
பேரன்பின் ஆதி ஊற்று

அதை தட்டித் திறக்குது காற்று…

 

இந்த வரியை மட்டும் கூட மறுபடி மறுபடி கேட்டுட்டே இருக்கலாம். நம்ம கை பிடிச்சு நம்பிக்கை சொல்ற மாதிரி ஒரு பாட்டு!

யாருமின்றி யாரும் இங்கு இல்லை… இதுக்கு மேல விளக்கம் சொல்லணும்னு நெனச்சு எழுதி எழுதி backspace அமுக்கினேன். Whatsappல தப்பான மெசேஜ் அனுப்புறதவிட அனுப்புனத delete for everyone கொடுத்த பிறகு, ஒரு வேளை என்ன அனுப்பி டெலீட் பண்ணிருக்கான்னு யோசிச்சு தப்பா நெனச்சுப்பாங்களோன்னு ஒரு பயம் வரும்ல அந்த மாதிரி இருந்துச்சு. அதனால, எதுவுமே சொல்லாம… நா. முத்துக்குமார் சொன்னதோடவே முடிச்சுக்குறேன் – யாருமின்றி யாரும் இங்கு இல்லை.

 

மேற்கு கரையில் (படம் – அருவி | பாடலாசிரியர் – அருண் பிரபு)

 

அடச்ச மனசு சிரிச்சு பேச
அடைக்கும் துயரம் அரண்டு மெரளும்.
மஞ்சள் மதியே
மயக்கும் மதியே
மயங்கி போகாதே,
மறுத்த உறவும் தயங்கி சேரும்

தவிச்சு போகாதே!

 

இந்தப் பாட்டுக்கு பெயரே – HOPE SONG. நிஜமாவே இந்த வரியை கடந்து போகும் போது அடைக்கும் துயரம் அரண்டு மெரளும். உவமை வச்சு எழுதுறதெல்லாம் ஆச்சரியப் படுத்தினாலும் இந்த உண்மைய எழுதுறது இருக்கு பாருங்க அதுதாங்க என்னமோ பண்ணுது. மறுத்த உறவும் தயங்கி சேரும்… முதல் முறை கேட்டதும் ஹப்பா! என்ன இப்படி உலகப் பொதுமறை எழுதிட்டார்னு என்னை அறியாமலே சொன்னேன்.

சித்திரை நிலா (படம் – கடல் | பாடலாசிரியர் – வைரமுத்து)

ஒரே நிலா
பரந்த வானம்
படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையில நிக்குதுடே

நீ கூட ஒத்தையில நிக்குறடே!

நீ இப்போ ஒத்தையிலதான் இருக்க. ஆனா, அதுக்காக கவலை படாத நிலா, வானம்.. ஏன் படைச்ச கடவுள் கூட ஒத்தையிலதான் இருக்குன்னு சொல்ற இந்தப் பாட்டு இன்னொரு HOPE SONG. இந்த தனிமை கடந்திடக் கூடியதுதான்னு ரொம்ப நம்பிக்கையோட சொல்ற பாட்டு.

கடற்புறத்தில் நடக்கக் கூடிய ஒரு கதை. ஒரு மீனவ கிராமத்து பையன் அம்மா இறந்ததும் தனியாகுறான். ஒரு அழுகுரலோட துவங்கும்… சித்திரை நிலா.

அதுல வர்ற இந்த வரிகள்…

 

கண்களிலிருந்தே காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே ஞானங்கள் தோன்றும்
 
சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்
மரமொன்று விழுந்தால் மறுபடி தழைக்கும்
மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும்?
 
பூமியைத் திறந்தால் புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால் தேன்துளி இருக்கும்
நதிகளைத் திறந்தால் கழனிகள் செழிக்கும்

நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்

 

கடல் பற்றியும் மீனவர்களுடைய வாழ்க்கை பற்றியும் வைரமுத்து எழுதிய தண்ணீர் தேசம் புத்தகத்துல வரும். நல்ல சிந்தனை. மணிரத்னம்.. சரி விடுங்க. அவரை புகழ்ந்தா இப்போலாம் நிறைய பேருக்கு பிடிக்குறதில்ல. புகழ்ந்துக்கலாம்… இன்னும் நிறைய நல்ல தருணங்கள் கொடுப்பார். காலத்துக்கும் புகழலாம். இப்போ அடுத்த பாட்டுக்கு போவோம்…

 

எளங்காத்து வீசுதே (படம் – பிதாமகன் | பாடலாசிரியர் – பழனி பாரதி)

பின்னிப் பின்னி சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னுதான் எணைஞ்சு இருக்கு

உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு

 

.
.
.
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம்

சேர்ந்தது போல…

பழனி பாரதி போகிற போக்குல சொல்லிட்டு போன மாதிரி இருக்கும் இந்தப் பாட்ட கேட்கும்போது. ஒரு உதாரணம் சொல்லி அதுவும் பின்னிப் பின்னி சின்ன இழையோடுற மாதிரி அவ்ளோ நெருக்கமா நாமளே விளகணும்னு நெனச்சாலும் விலக முடியாத அளவுக்கு நெருக்கமா உறவுகள் இருக்குன்னு சொல்லாம சொல்லி… மறுபடி ஒரு முறை அழுத்தமா, நேரடியா சொல்றார் உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே!

மறுபடி ஒரு முறை அழுத்தமா, நேரடியா சொன்னதுக்கு அவருக்கு அவ்வளவு முறை நன்றி சொன்னாலும் போதாது. நமக்கு அப்படித்தான, சொல்லணுமே. நாம அழகுன்னு அடுத்தவங்க சொல்லணும். நான் இருக்கேன்னு இன்னொருத்தர் வாயத்தொறந்து சொல்லணும். இப்படி நமக்கு வேற ஒருத்தர் சொல்லணும் எல்லாம். நமக்கு தெரிஞ்சதுதான்னா கூட, இன்னொரு குரல் நமக்கு நெருக்கமான இன்னொரு குரல் அதை சொல்லி கேட்குறதுலதான் நூறு சதவீதம் திருப்தி கிடைக்குது நமக்கு. அதனால, நமக்காகவே… எதுவுமே இங்க தனியா இல்லைன்னு சொன்ன இந்த பாட்டு.SPECIAL MENTION –


கண்ணான கண்ணே (படம் – நானும் ரெளடிதான் | பாடலாசிரியர் – விக்னேஷ் ஷிவன்)

 

இந்தப் பாட்டு தனிமைய போக்குற பாட்டான்னு எனக்குத் தெரியல. ஆனா, தனிமை உணர்வுலேயிருந்து ஒரு விதமான விடுதலை கிடைக்கும். சில நேரத்துல, நமக்கு மோட்டிவேஷன் வேகம் உத்வேகம் எதுவுமே வேலைக்காகாது. அரவணைப்பும், ஆசுவாசமும்தான் தேவைப்படும். அதுக்கான ஒரு பாட்டா பல நேரங்கள்ல எனக்கு இருந்திருக்கு இந்த பாட்டு.

காதல் பாட்டுதான்னாலும் கூட, அதையும் மீறியொரு உணர்வுள்ள பாட்டு. இப்படி யாராவது நமக்காக பாட மாட்டங்களான்னு சில நேரத்துல ஆசைப்பட வச்சாலும் ஒரு நல்ல அஞ்சு நிமிஷ துணை இந்தப் பாட்டு. இங்க வான்னு கூப்பிட்டு பக்கத்துல உட்கார வச்சு, பரவாயில்ல அழணும்னா அழுன்னு சொல்ற பாட்டு. அழலாம் இந்தப் பாட்டு கூட. அழுது கொட்டித் தீர்க்கலாம். Instant relief!

———‘பாறாங்கல்ல சொமந்து வழி மறந்து ஒரு நத்தக் குட்டி நகருதடி’ (காட்டுச் சிறுக்கி, ராவணன்) வைரமுத்துவோட இந்த வரி வேற ஒரு உணர்வை/மன நிலைய வெளிப்படுத்த எழுதியிருந்தாலும், தனியா இருக்கோமுங்குற எண்ணம் இருக்கே.. அது இந்த வரியில இருக்க பாறாங்கல், நத்தைக்குட்டிதான் நாம. அந்த அளவுக்கு மூச்சுத் திணற வைக்கக் கூடியது!மேல சொன்ன பாட்டெல்லாம் கேட்கும்போது தனிமை… தானோஸ் போட்ட சொடக்குல மாட்டி காணாமலே போயிட்ட மாதிரி தோணும். சில நேரங்கள்ல அந்த வரிகள்ல இருக்க நம்பிக்கை, அப்போ அந்த பாட்டுல அந்த வரியை கேட்குற ஒரே ஒரு நொடிதான் தாக்குப்பிடிக்கும்னு கூட வச்சுக்கோங்களேன். இருந்தாலும், அந்த ஒரு நொடியில நம்மள மறந்து நம்ம தனிமை பயத்த மறந்து ரொம்ப இலகுவான ஒரு மனநிலையில இருக்க முடியும். அப்படியே காலத்துக்கும் இருந்திடலாம்னு கூட தோணும்.

நாம எப்போதுமே இங்க தனியா இல்ல. கேட்குறவங்க எல்லாருக்குமே இந்தப் பாட்டெல்லாம் ஏதோ நமக்காகவே எழுதின மாதிரி தோணுது. நீங்க, உங்கள மாதிரியே இந்த வரிகள்ல தனிமையை தூரத்தூக்கிப் போட தயாரா இருக்க ஒருத்தர் – ரெண்டு பேர் ஒரே மாதிரி தனிமை எண்ணணத்தால சூழப்பட்டவர்கள். ஒரே உணர்வுகளை சுமந்துத் திரியுற உயிர்கள் இருக்கும்போது நாம இங்க தனியா இல்லன்னு அர்த்தம்.

Five Songs To Listen If You Feel You Are Aloneரெண்டு பேர் ஒன்னா இருக்கும்போது தனியா இருக்கேன்னு சொல்றது சரியா என்ன?

Advertisements

From Fighting With A Girl To Flaunting His Victory – Reasons Why I love SJ Suryah

ஒரு நாள் –

புதுச்சேரியிலேயிருந்து கேரளாவுக்குப் போன போது பக்கத்துல இருந்த ஒரு பொண்ணுகூட பேசிட்டிருந்தபோது இடையில… எனக்கு எஸ். ஜே. சூர்யா பிடிக்கும்னு நான் சொன்னதும் சிரிச்சுட்டாங்க.

நிறைய விளக்கம் சொல்லி ஒரு கட்டத்துல அவங்க புரிஞ்சுக்காம சண்டையெல்லாம் ஆச்சு.

இன்னொரு நாள் –

இசை படம் வெளியான நாள். பத்து பேருக்கு கைக்காசு போட்டு டிக்கெட் வாங்கி கூட்டிட்டு போறேன்.

படம் முடியுது… நீ பார்த்ததெல்லாம் கனவுடான்னு சொல்லி சிரிக்குறார் எஸ். ஜே. சூர்யா. ஜெயிச்சுட்டான்டா எங்காளுன்னு சத்தம் போட்டு கைத்தட்டி அழுறேன் நான்!

என்னது எஸ்.ஜே. சூர்யாவுக்காக ஒரு பொண்ணு கூட சண்டை போட்டியா? எஸ்.ஜே. சூர்யா ஜெயிச்சுட்டார்னு அழுதியா? அப்படி என்ன அவர புடிக்கும் உனக்கு!? ஆச்சரியமா பார்க்குறவங்க நிறைய பேர்.

எனக்கு எஸ்.ஜே. சூர்யாவை பிடிச்சுப்போனதுக்கு மூன்று முக்கியமான காரணங்கள் –

 • அவருக்கு சிம்ரன் பிடிக்கும். (ஒரு ஜாடையில சிம்ரன் மாதிரி இருக்காங்கன்னுதான் அன்பே ஆருயிரே படத்துல நிலாவ அறிமுகம் செஞ்சதா சொல்லியிருக்கார்)
 • அ.ஆ படம் (கன்னா பின்னான்னு அடம் பிடிச்சு நான், எங்க அக்கா, என்னோட மாமா, மாமி… ரெண்டு தம்பிங்க அதுல ஒருத்தருக்கு நல்ல ஜுரம்) எங்க ஊர் தியேட்டர்ல பார்க்குறோம். அப்போ, முதல் அஞ்சு நிமிஷத்துல கதை சொல்லி நீ இவ்ளோ நேரம் பார்த்தது முழு செட் இல்ல வெறும் ஒத்த செவுருன்னு காமிச்சு அசத்தினார். எனக்கு இப்பவும் அது ரொம்ப பெரிய ஆச்சரியம்!
 • எஸ்.ஜே. சூர்யா ஒரு தீவிரமான கவிஞர் வாலி பிரியர். (இசை படத்துல ஒரு சின்ன பையன் கேரக்டர்கு வாலின்னு பேர் வச்சிருப்பார். சில்லறையெல்லாம் செதற விட்டேன்! கவிஞர் வாலி அவர்களுக்கும் எஸ்.ஜே. சூர்யாவை ரொம்ப பிடிக்கும். அவருடைய நினைவு நாடாக்கள் புத்தகத்துல எஸ்.ஜே.சூர்யா பற்றி பெருமையா எழுதியிருப்பார்.)

‘எஸ். ஜே. சூர்யா ஒரு படம் பண்றான் அப்படின்னா… தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூனுலையும் மார்கெட் இருக்கணும் அந்தப் படத்துக்கு’ இப்படி வாயத்திறந்து செஞ்சு காட்டுவேன்னு சொல்லக் கூடிய தைரியம் இங்க வேற யாருக்கும் கிடையாது. இதை இறைவி ரிலீஸுக்கெல்லாம் முன்னாடியே நிறைய இன்டெர்வியூஸ்ல சொல்லிருக்காரு. யோசிச்சு பாருங்க… இப்போ பார்க்குறதுக்கு மனுஷன் செம்மயா இருக்காரு, விஜய் படமா இருந்தாலும் எஸ். ஜே. சூர்யா வந்தா கைத்தட்றோம்.

ஆனா, அன்பே ஆருயிரே, வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி படங்கள் வரும்போது… அந்த மனுசன பார்த்து ஊரு பேசாத பேச்சா. அப்படி இருக்கும் போதும் தைரியமா இப்படி தனக்குள்ள இருக்க ஒரு ஆசைய வெளிப்படைய சொல்றதுக்கு பெரிய தன்னம்பிக்கை வேணும்! ஒரு மனுசன் தன்னை எவ்ளோ நம்பியிருந்தா அப்படி சொல்லிருப்பார்னு பல நாள் யோசிச்சு பார்த்திருக்கேன். நீங்களே சொல்லுங்க… உங்களால சொல்ல முடியுமா இவ்ளோ நம்பிக்கையோட நான் செஞ்சு காட்டுவேன்னு பல லட்சம் பேர் முன்னாடி? என்னால முடியாது 🙏🏻

‘நீயெல்லாம் எதுக்கு நடிக்க வந்த… பேசாம டைரக்‌ஷனுக்கே போயிடு. அதான் நல்லா வருதுல்ல!’ இப்படி பல பேர் கேட்டாலும், தன்னை ஒரு நடிகனா நிலை நிறுத்தத்தான் இங்க வந்தோம்னு உறுதியா இருந்தது மகாசாதனை.

ஏன்னா, அதை பண்ண போறேன் இதை பண்ண போறேன்னு சொன்ன பல பேர் ஏதோ ஒரு வேலையில சேர்ந்து ரெண்டு மாசம் சம்பளம் வந்ததும், அப்படியே இருந்திடுவோம் எதுக்கு ரிஸ்க்குன்னு அப்படியே இருக்குறத பார்த்திருக்கோம். அப்படியே எஸ். ஜே. சூர்யா வாழ்க்கைக்கு வருவோம்…

விஜய், அஜித், மகேஷ் பாபு, பவன் கல்யாண் – எல்லாம் பெரிய பெயர்கள். அப்படியே படம் டைரக்ட் பண்ணிட்டு இருந்திருக்கலாம். ஆனா, நடிகனாகணும்னா ஒரு படம் வேணும், அந்த படத்துக்கு ஒரு கதை வேணும், அதுக்கு ஒரு டைரக்டர் வேணும், அந்தப் படத்தை தயாரிக்க ஒரு ப்ரொட்யூசர் வேணும்னு தெரிஞ்சுகிட்டு கதை எழுதி, மத்த ஹீரோஸ் வச்சு படம் இயக்கி, அவங்களுக்கு பெரிய ஹிட் கொடுத்து பேர் சம்பாதிச்சு கொடுத்து, தனக்கு பேர் சம்பாதிச்சு, பணம் சம்பாதிச்சு…

கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன், தயாரிப்பு

எஸ். ஜே. சூர்யா

SJ Suryah

அதுவும் இசை பார்த்த பிறகு ஒன்னு தோனுச்சு..

SJ SURYAH IS THE MAN OF COMEBACK!

(இசை படத்துல – பாத்ரூமுக்குள்ள வாய் விட்டு அழ முடியாம… வாயப்பொத்தி அழுற அந்த ஒரு காட்ச்சிதான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பார்த்து நான் அசந்து போனது.)

முக்கியமா ஒன்னு சொல்லணும்… எஸ்.ஜே. சூர்யா இயக்கத்துல விஜய் நடிச்ச குஷி, அஜித் நடிச்ச வாலி – இந்த ரெண்டு படத்துலயும், விஜய் அஜித் முகத்துல, பாவனைகள்ல எஸ்.ஜே. சூர்யாதான் தெரிவார். விஜய் அஜித் மட்டுமில்ல பல இடங்கள்ல, சிம்ரன், ஜோதிகா முகத்துல கூட எஸ்.ஜே. சூர்யாதான் தெரிவார். அதுக்கப்புறம்.. விஜய் அஜித் முகத்துல நாம விஜய் அஜித் தவிர ஒரு டைரக்டரோட முகத்த பார்த்தது எப்போ? எனக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

இப்படி தனக்குள்ள இருந்த ஒரு நடிகனை இவ்ளோ நாள் உயிரோட வச்சிருந்ததே இந்த உலகத்துல அதிசயம். என்னை வேற யாரும் நடிகனாக்கலைன்னா என்ன… நானே என்னெல்லாம் தேவையோ எல்லாம் சம்பாதிச்சு ஹீரோ ஆவேன்னு சொல்லி ஆனது. அதுவும், பெரிய வெற்றி, பேர், பணம் வந்த பிறகு… தோத்துட்டா எல்லார் கண்ணு முன்னாடியும் தோத்துடுவோம்னு யோசிக்காம தோத்தாலும் பரவாயில்லன்னு நம்ம முன்னாடியே தோத்து நம்ம முன்னாடியே ஜெயிச்சு நிக்குறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.

இதெல்லாம் ஒரு மூஞ்சியான்னு கேட்டவங்கள அதே மூஞ்சிய தியேட்டர்ல பார்த்து விசிலடிக்க வச்சாரு பாருங்க எஸ். ஜே. சூர்யா அங்கயே ஜெயிச்சுட்டார்!

(இவ்ளோ திறமை இருந்து இவ்ளோ புதுசா யோசிக்குற மனுசன்.. ஏன் GLAMOUR மேல அளவுக்கதிகமா நம்பிக்கை வைக்குறாருங்குறதுதான் எனக்கு பிடிபடாத ஒரு விஷயமா இருக்கு. அடுத்து ஒரு படம் இயக்கினால் தெரியும் இப்பவும் அந்த நம்பிக்கை அப்படியே இருக்கா இல்லையான்னு)

சில பேருடையெ வெற்றிய… நம்ம வெற்றியா நினைப்போம். அந்த மாதிரிதான் எனக்கு எஸ்.ஜே.சூர்யாவுடைய வெற்றி. அந்த மனுசன் ஜெயிக்குற ஒவ்வொருமுறையும் நானே ஜெயிச்ச மாதிரி சந்தோஷப்பட்டிருக்கேன்… இனியும் சந்தோஷப்படுவேன். அந்த மனுசன் இன்னும் நிறைய ஜெயிக்கணும்!

Homosexuality to Threesome – 10 Times Vaali Proved That He Is The Coolest Lyricist

சென்ஸார் சேட்டைகள் – 

ஒரு உதாரணம்தான் ரொம்ப விளக்கமா சொல்லிருக்கேன் மீதி ஒன்பது உதாரணங்கள் டக்கு டக்குன்னு படிச்சிடலாம்..

‘குலகவுரவம்’ படத்தில் – தாயின் சிதைக்கு தீ மூட்டிவிட்டு – கதாநாயகன் தாயை நினைத்துப் பாடுவதாக ஒரு காட்சி.

தாயின் தகவுகளையெல்லாம் உருகி உருகி உரைக்கப்பெற்ற அந்தப் பாடலின் சில வரிகளுக்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. அவை ஆபாசமாக இருப்பதாக!

‘வன்பசி – வாட்ட –

உலைப்பால் உன்சேய் வாடுகையில் – அதற்கு

விலைப்பால் வாங்கி வழங்காமல் – புடவைத்

தலைப்பால் சேய்முகம் தனைமூடி – அம்மா! நீ

முலைப்பால் தந்ததை மறப்பேனா? மாதா!

உன் மாடி மறுபடி நானும் பிறப்பேனா!’

இப்படிப் போகிறது அந்தப் பாட்டு. ‘முலை’ என்பது ஆபாசமான சொல்; அதை நீக்க வேண்டும்’ என்று தணிக்கைக்கு குழுவினரும், தணிக்கை அதிகாரியும் என்னுடன் தர்க்கித்தார்கள்.

“அய்யா! அது ஆபாசமான வார்த்தை அல்ல; ஆழ்வார்களும், ஆண்டாளும், வள்ளுவனும், கம்பனும், பாரதியும் – தங்கள் பனுவல்களில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அறநெறிகளையும், அருள் மொழிகளையும் பாடி வைத்துப் போன அந்தப் பாவலர் பெருமான்கள் –
‘முலை’ என்பது கெட்ட வார்த்தை என எண்ணியிருப்பரேல், ஏடுகளில் அதற்கு இடம் தந்திருப்பார்களா?”

– என்று கேட்டு, பல பழம்பாடல்களை வரிசையாக எடுத்துரைத்தேன்!

என் வாதங்கள் தணிக்கையாளரிடம் எடுபடவில்லை. ஒரு சொல்லை, ‘இடம் பொருள் ஏவல்’ பார்த்துப் பொருள் கொள்ளுமளவு – அவர்கள் மாட்டு, மொழியாளுமை இல்லையோ என நான் எண்ண நேர்ந்தது!

விட்டலாச்சார்யாவின் – ஒரு படம்; அது Folklore; அதில், நான் ஒரு நாட்டிய பாடல் எழுதியிருந்தேன்.

அதில்,

‘அகில் ஏறும்

முகிலும்;

துகில் மீறும்

நகிலும்…’

என்று சரணத்தில் வரும்.

‘துகில் மீறும் நகில்’ என்றால் – ‘மதரப்பின் காரணமாய், மார்க்கச்சு மீறி நிற்கும் முலை’ – என்று பொருள்.

சென்ஸாரின் செம்மொழி ஞானத்திற்கு – இந்தப் பொருள் பலப்படாததால், பிழைத்துப்போனது பாட்டு!

(மேலே நீங்கள் இப்போது படித்தது வாலி எழுதியநினைவு நாடாக்கள்புத்தகத்திலிருந்து எடுத்தது)

*

ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீநிவாசன்தான்

ஸ்ரீநிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்,

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்!

– கல்லை மட்டும் கண்டால், தசாவதாரம் (2008)

ராஜலக்ஷ்மி – கமல் ஹாசனுடைய அம்மா
ஸ்ரீ நிவாசன் – கமல் ஹாசனுடைய அப்பா

இது கூட பரவாயில்ல.. திறமைன்னு சொல்லலாம்,

அடுத்த வரி எழுதத்தான் திறமைக்கு மீறிய ஒரு தைரியம் வேணும்,

‘ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்’ – ரங்கராஜன் – வாலியின் இயற்பெயர்.

*

Yellow Lineஆ இ.பி.கோ

இஷ்டம்போல நீயும் go

இன்பத்துக்கு கோடி ரூட்டு எங்கெங்கோ!

– ஓ மாமா, மின்னலே (2001)

*

குறுக்கெழுத்து புதிர் நானே

மேலிருந்து கீழ் நிரப்பு, 

வலிக்காத அம்பு ஒன்றை

மனசுக்குள் நீ அனுப்பு!

– X மச்சி Y மச்சி, கஜினி (2005) 

இந்த வரியின் சென்சார் செய்த வெர்ஷனை வீடியோவில் கண்டு கேட்டு மகிழலாம்!

*

Chinese Noodles நீதான்

Tomato sauceம் நான்தான்,

இது Fast Food காலம்

அடி waste வெட்கம் நானம்!

– ஓ பியாரி பானி பூரி, பூவே உனக்காக (1998) 

*

நாமெல்லாம் யார் ஒன்றுக்குள் ஒன்றான ஒலிம்பிக் ரிங்தான்.

– தோஸ்து படா தோஸ்து, சரோஜா (2008)

அந்த நாள் ஞாபகம், முஸ்தஃபா முஸ்தஃபா, தோஸ்த்து படா தோஸ்த்து – இப்படி ஐந்து தலைமுறைகள் தாண்டியும் அந்தந்த காலத்திற்கான நட்பை எழுதிய ஒரே மனுசன் வாலிதான்!

*

அக்கடான்னு நாங்க உடை போட்டா

துக்கடான்னு நீங்க எடை போட்டா

தடா..

அடமென்டா நாங்க நடை போட்டா

தடை போட நீங்க கவர்ன்மெண்டா!

– அக்கடான்னு நாங்க உடை போட்டா, இந்தியன் (1996)

*

ரெண்டு பேரும் ஒட்டி வந்தால்

மாற்றான் போல் ரசிப்பதா!?

– மிஸ்ஸிஸ்ஸிப்பி, பிரியாணி (2013)

Who else would have thought of placing Maatraan reference and conveying threesome idea!

*

இந்த சாக்ஸோஃபோனை

இரு கையிலேந்தி

பில் கிளிண்டன் போல வாசி,

இவள் கன்னியல்ல

ஒரு கணினி என்று

பில் கேட்ஸை போல நேசி.

– காதல் வெப்ஸைட் ஒன்று, தீனா (2001)

Ever wondered what’s the relationship between Bill Clinton and Saxophone? Google it☝️

Ah! Wait.. I can’t stop myself from sharing one more line from the same song…

Hot boxல் வைத்த food உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்,

என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்னம் தாக்கக் கூடும்!

*

பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு

பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு!

– மாரோ மாரோ, பாய்ஸ் (2003) 

Homosexuality!! Vaali has written this in 2003 and it is 2018 now. We are still fighting for decriminalisation!
It took several years for me to understand this line! If you have any doubts, watch the video of this song and note what the actors do while singing this line.

*

ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன் கடைசியா…

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

எழுதினதும் வாலிதான்

ஓம் சிவோஹம்

எழுதினதும் வாலிதான்

கல்லை மட்டும் கண்டால்

எழுதினதும் வாலிதான்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

எழுதினதும் வாலிதான்

ங்கொப்பன் மவனே வாடா

எழுதினதும் வாலிதான்

சக்கர இனிக்குற சக்கர

எழுதினதும் வாலிதான்

ஒனக்காக பொறந்தேனே எனதழகா

எழுதினதும் வாலிதான்

அந்த நாள் ஞாபகம் வந்ததே

எழுதினதும் வாலிதான்

முஸ்தஃபா முஸ்தஃபா

எழுதினதும் வாலிதான்

நா நனனா (பிரியாணி)

எழுதினதும் வாலிதான்

நான் ஏன் பிறந்தேன்

எழுதினதும் வாலிதான்

வாலி வாலிதான்!

இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமில்ல…

 

So, what are some of the moments Vaali left you awestruck!?

கண்ணீருடன்- வாலிப ‘வாலி’ அவர்களுக்கு

நண்பன் வாலிக்கு,
எப்படி இருக்க ஓய்? நீர் எங்க இருக்கீங்கன்னு தெரியல ஆனா ஒன்னு மட்டும் உறுதி, நீர் என்ன விட்டுட்டு போய்ட்டீர். சொல்லப் போனா என்ன மட்டும்தான் விட்டுட்டு போய்ட்டீர். மத்தவங்கள விட்டு போகல. இங்க எல்லாரும் இப்பவும் உங்கள பத்திதான் பேசிட்டு இருக்காங்க. இவ்வளவு நாள் கூடவே இருந்திட்டு இப்படி திடீர்னு விட்டுட்டு போகலாமா? இது உமக்கே நியாயமா?

எல்லாரும் நான் உன்கூட இருந்ததுனாலதான் உனக்கு பெருமைன்ற மாதிரி பேசுறாங்க. ஆனா அது நெசமில்ல. நான் சிகரெட்னா நீதான் டீ. யாரால யாருக்கு பெரும? சரி, அதை விட்டுத் தள்ளும்.
ஒன்னு தெரியுமா இங்க எல்லா இடத்துக்கும் நான் தேவை, எல்லாருக்கும் நான் தேவை, நீ இல்லேனாலும் யாராவது என்ன கூட்டிட்டு போவாங்க. அது பிரச்சனை இல்ல. ஆனா, கடைசி வரைக்கும் என்னை விட்டுப் போகாத, எந்த இடத்திலும் என்ன விட்டுக் கொடுக்காத ஒரே மனுஷன் நீர்தான். எங்க போனாலும் என்ன கூட்டிட்டுதான் போவீர். இப்போ மட்டும் ஏன்யா விட்டுட்டு போயிட்டீர்?

பாவம் நீர் என்ன செய்வீர் கூட்டிட்டு போக முடிஞ்சா, வர மாட்டேன்னு சொன்னா கூட, கையப்புடிச்சு இழுத்துட்டு போயிருப்பீர். அட! நான் வேற போயிட்ட போயிட்டன்னு புலம்புறேன். எவனாவது கேட்டா அடிக்க வருவான்.

மாறுவேஷம் போட்டு எல்லாரும் போலீஸ ஏமாத்துவாங்க ஆனா நீர் எமனையே ஏமாத்திட்டீர். இப்போ சந்தோஷமா?? அந்த எம தர்ம ராசாவுக்காவது கொஞ்சம் அறிவு வேண்டாம்..தாடி வெளுத்துட்டா மட்டும் வயசாயிடுச்சுன்னு ஆகிடுமா? பழங்கால சினிமாவுல வருமே அந்த மாதிரி தாடி இருக்குறத பார்த்து ஏமார்ந்துட்டார்! அப்போவே சொன்னேன் வேஷத்த கல்ச்சிடுன்னு நீர் கேட்கலை. அந்த எமனும் ஏமார்ந்து போய் தூக்கிட்டான்.
உமக்கென்ன… அங்க போய் ஒரு கலக்கு கலக்கி ஜம்முன்னு அரசவை புலவராயிடுவ, இங்க எம்பொழப்பு என்னஆகுறது?

நான் மத்தவங்க கூட இருந்தத விட உன்கூட இருந்தப்போதான் சந்தோஷமா இருந்தேன். இப்பவும் சொல்றேன் நான்தான் உன்னை விட்டு விலக மனசில்லாம பாட்டி தாத்தா வீட்டுக்கு ஆனுவல் லீவுக்கு போன ஸ்கூல் புள்ள மாதிரி ஒட்டிக்கிட்டிருந்தேன். ஆனா, கண்ணசந்த நேரத்துல உன்ன காணோம். கண்ணு முழிச்சு பார்த்தப்போ எனக்கு கணக்கு வாத்தியார்கிட்ட பெரம்படிவாங்குனது மாதிரி இருந்துச்சு. தூக்கி வாரி போட்டுருச்சு!

பதினஞ்சாயிரம் பாட்டுக்கு மேல எழுத்திட்டீர். எம்.ஜி.ஆர்லேர்ந்து தம்பி எஸ்.டீ.ஆர்வரைக்கும் உன் வார்த்தைக்கு வாயசைச்சிருக்காங்க.
தமிழ் சினிமா ஹிஸ்டரிலயே நம்ம ரெண்டு பேரு கெமிஸ்ட்ரி தான் டாப்பு. நம்ம ஜோடிக்கு போட்டி ஏதாவது வருமுங்குற!? ஹூம் ஹூம்! இந்த ஒரு பெரும போதுமேயா எனக்கு. எதுக்கு நேஷனல் அவார்டு? என்ன நான் சொல்றது? சரிதான?

உனக்கும் எனக்கும் இருந்த உறவு, மாதவிக்கும் கோவலனுக்கும் இருந்த உறவு மாதிரி. நான் ஒரு அந்தபுரத்து பொருள்தான். யார் வேணும்னாலும் ஆசை படலாம். ஆனால், உன்னாலதான் எனக்கு பெருமை. நீ இல்லாம மத்தவங்ககிட்ட இருக்கிறது எப்படி தெரியுமா இருக்கு? வேற வழி இல்லாம தினமும் மறுமணம் செஞ்சிக்குற மாதிரி இருக்கு. என்ன எவன் தீண்டினாலும் நீதான் ஞாபகத்துக்கு வர. உண்மையா ஒரு வேசி மாதிரி ஆயிட்டேன்யா. ஏன்யா! இப்படி புலம்ப விட்டுட்டு போயிட்டீரே? இது உங்களுக்கே நல்லா இருக்கா? என்னோட இந்த வலியப்போக்க வாலி-நீ (VOLINI) இங்க இல்ல!

ஒன்னு நல்லா புரிஞ்சுக்கிட்டேன் ஒவ்வொருத்தரோட வாழ்க்கை முடியறதுக்கும் முன்னாடி நான் இருந்தா அவங்க எப்படி சந்தோஷப் படுவாங்களோ அந்த மாதிரி என் முடிவுக்கு பின்னாடி நீர் இருந்தது எனக்கு சந்தோஷம்.
நான் உன்னோட அடைமொழி இல்ல ஓய். நீர்தான் நான் வாங்கின டிகிரி!
‘வாலிப’ வாலி சரியானதில்ல. வாலிப ‘வாலி’ இதுதான் சரியானது.

ஐ மிஸ் யு!

கண்ணீருடன்,
இளமை

என்றும் நெஞ்சோடு இருக்கும் கவிஞர் வாலி அவர்களுக்கும்,
இதனை எழுத வைத்த, எழுத உதவிய ஸ்ரீநிவாசனுக்கும்.

All credits goes to Srini Vasan 🙂

PERANBU Songs- Yuvan is here. Go back!

Yuvan
தூரமாய், வைரமுத்து –

வைரமுத்து அவருடைய அம்மாவுக்காக எழுதிய ஒரு கவிதையில ‘பேனா எடுத்தேன் பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்’ அப்படின்னு ஒரு வரி எழுதியிருப்பாரு. இங்க நம்ம கண்ணு முன்னாடி வானம் பார்த்து விரிஞ்ச இயற்கைய வைரமுத்து போல ஆத்மார்த்தமாக எழுதிடணுங்கிறது வைரமுத்து நமக்கெல்லாம் கொடுத்திருக்க ஒரு பெரிய பொறுப்புன்னு நான் நம்புறேன்.

இயற்கை… கொடுத்தே பழகியது. எடுத்தாலும் திருப்பிக் கொடுத்துவிடும். விழுங்கினாலும் விதையாய்தான் விழுங்கும்! அப்படிப்பட்ட இயற்கை தன்னோட ஈரத்தின் வழியே நமக்கெல்லாம் ஒரு பெரிய நம்பிக்கைய கொடுக்குது. அந்த ஈரத்த, அந்த நம்பிக்கைய நாம உணரும் தருணத்துல இன்னும் எழில் கூடிப்போய் நம்மள அரவணைச்சுக்கவும் செய்யுது. அந்த அரவணைப்பைத்தான் ‘தூரமாய்’ பாட்டு குறிப்பெடுத்து சொல்லுது.

இங்கே தோன்றும் சிறிய மலை
இயற்கை தாயின் பெரிய முலை
பருகும் நீரில் பாலின் சுவை
பரிவோடு உறவாடு!
இயற்கையோட இந்த ஈரத்தை விட்டு நாம ரொம்ப தூரமாய் வந்துட்டோமுங்குறத திட்டாம, தெகட்டாம ஞாபகப்படுத்துது இந்தப் பாட்டு. இயற்கைக்குப் பக்கத்துல ஒரு கோடு போட்டு அதை வாழ்க்கையோட பொருத்திப் பார்க்கும் போது ஒரு தெளிவு கிடைக்கும். இந்த match the following வேலைய தமிழ்ல ஏராளமான பாடலாசிரியர்கள் தவறாம செஞ்சுக்கிட்டே வர்றாங்க.
பெருந்துன்பம் பழகிப் போனாலே
சிறு துன்பம் ஏதும் நேராது,
தண்ணீரில் வாழும் மீனுக்கு
ஏது குளிர்காலமே!

இயற்கை உதாரணங்கள் சொல்லி வாழ்க்கைய பேசுறது நம்பக்கூடிய வகையில மோட்டிவேட் பண்றதுன்னு எனக்கு எப்பவும் ஒரு எண்ணம் உண்டு. ஏன்னா, இயற்கைதான் இலக்கணம். நாம வார்த்தைகள். இலக்கண விதிப்படிதான் நம்ம செயல்பாடு.

குறையும் உந்தன் அழகாகும்
வளையும் ஆறு வயல் பாயும்
வரமே ஓடி வா!
இந்த வரியில ‘குறை’ அப்படிங்குற வார்த்தை நம்ம எல்லாருக்கும் இருக்க ஒரு குறைய ஒரு நொடி கண்ணு முன்னாடி கொண்டுவந்து நிறுத்திடும். படத்துல வரக்கூடிய ஒரு கேரக்டருக்கு பொருத்தமாக எழுதப்பட்டிருந்தாலும் நம்ம எல்லாருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கும். அப்படி எதுவும் இல்லைன்னாலுங்கூட, ஏதாவது ஒரு விஷயத்தை நமக்கு இருக்கக் கூடிய குறையா நாமளே சொல்லிப்போம். அது நிஜத்துல ஒரு குறையா இல்லாமலே போனாலும் கூட நாம விடமாட்டோம். நமக்குதான் நம்மள குறை சொல்லலைன்னா தூக்கம் வராதே. நமக்கா சொல்லிக் கொடுக்கணும்!

இப்படிப்பட்ட நமக்கு, நாமதான் ஆறு… நாமதான் வரம்னு சொல்றதுக்காகவாது இந்த மாதிரி கவிதையும் இசையும் கூடவே வச்சுக்கணும்.

பனி மூட்டம் மூடிப் போனாலும்
நதியோட்டம் நின்று போகாது
விதி மூடும் வாழ்வில் விடை தேடித்தேடி
நடை போட வா!

குறைகள் பேசி, நம்பிக்கை பேசி கடைசியில நடை போட வான்னு சொல்ற இந்தப் பாட்டை கேட்கும்போதே, அங்கங்க மேகத்தோட நிழற்பூக்கள் பூர்த்த, பச்சை போர்வை போர்த்திய மலைப் பிரதேசத்த ரசிச்சுக்கிட்டே இன்னொரு தூரத்து மலை உச்சியில நடக்குற மாதிரி இருக்கு!

அன்பே அன்பின், சுமதி ராம் – 

அன்பு – அளவில்லா தூரங்களை கடந்திடும். கொஞ்சமாகவே கிடைத்தாலும் கூட அளவில்லா ஆனந்தம் கொடுக்கும். நாமே ஏதோ நிரம்பி வழிவது மாதிரி ஒரு உணர்வு தரும்.

வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே
ஒரு பறவை போதும்

அன்பு நம்ம வீட்டுப்பக்கம் வரும்போது…
‘நான் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்’னு சத்தமா கதவ சாத்தாம,
நாம கதவ திறந்து அதை அனுமதிக்கும் போது
சிரிச்சு சந்தோஷமா ஏற்றுக் கொள்ளும் போது
மனசார அனுபவிக்கும் போது அந்த அன்பு நமக்கு என்ன செய்யும், அந்த அன்பு நம்மள எப்படி பார்த்துக்கும்னு சொல்ற பாட்டு.

இடியும் மின்னலும்
முறிந்தது இன்று,
தனியாய் மரமொன்று
வென்றது நின்று!

பாடலாசிரியர் சுமதி ராம் – ‘இடியும் மின்னலும் முறிந்தது’ – ஒரு வரியில அன்பின் வலிமைய போகிற போக்கில் சொல்லிட்டு போறாங்க.

நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேசப் பேச பூக்கள் பேசுதே…

கார்த்திக் பாடினா கேட்டுகிட்டே இருக்கலாம். அதுவும் இந்த மாதிரி அன்பையும், நிறைவையும் வெளிப்படுத்தக் கூடிய பாட்டு அவர் பாடும்பொழுது இன்னும் அதிகமா பிடிச்சுப் போகுது.

வான் தூறல், வைரமுத்து –

இயற்கையிலேயிருந்து உதாரணம் காட்டி, வாழ்க்கைய பேசி, இறுக்கமா தோள் பிடிச்சு நம்பிக்கை சொல்ற வேலைய இந்தப் பாட்டுலேயும் செஞ்சிருக்கார் வைரமுத்து.

விதையை புரட்டி போட்டாலும்
விண்ணைப் பார்த்துத்தான் முளைக்கும்,
பேரன்பினால் வாழ்க்கையின்
கோணல்கள் நேர்படும்.

*

பருவம் கடந்து போனாலும்
அருகம்புல் சாகாது,
ஓர் தூறலில் மொத்தமாய்
பச்சையாய் மாறிடும்.

*

ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்திலே காடு தெரிந்தால்,
பக்கம்தானே நீர் நிலை என்று
பேசும் குரல்கள்.

என்ன ஒரு நெருக்கம் இருக்கு பாருங்க இந்த வரியில. சின்ன வயசு ஸ்கூல் டூர்லேயிருந்து இப்போ வரைக்கும் ஒரு அருவிய நோக்கி நடக்கும்போதோ, ஒரு ஆறு நோக்கி நடக்கும்போதோ..

பக்கத்துல நெருங்க நெருங்க சுத்தி இருக்க எல்லாரும்
‘ஹே! உனக்கு கேட்குதா?’
‘எனக்கு கேட்குது. உனக்கு கேட்குதா? எவ்ளோ நல்லா இருக்குல்ல!’
இந்த மாதிரி பேசி, கேள்விகள் கேட்டு நீரோட்டத்தோட சத்தத்தை வெகுவா கொண்டாடிய தருணங்களையெல்லாம் நினைவுபடுத்துது.

மெல்லத்தானே சொல்லும் மாறும்!
சொல்லித்தானே சோகம் தீரும்!

இந்த ரெண்டு வரிகளும் ரொம்ப முக்கியமான வரிகள் –

 
 • மறுபடி மறுபடி வாழ்க்கையும் காலமும் நல்ல திருப்பங்கள எதிர்பார்த்து நாம அவசரப்படும் போதெல்லாம், தேவர் மகன் சிவாஜி மாதிரி ‘அந்தப்பய மெதுவாத்தான் வருவான்… மெதுவாத்தான் வருவான்’னு சொல்லிக்கிட்டே இருக்கு. அதை இந்தப் பாட்டுல சொன்னது ரொம்பவும் பொருத்தமானது. வாழ்க்கை சொல்லி கேட்காத நாம வைரமுத்து சொல்லியாவது கேட்போம்!

 

 • சொல்லித்தான் சோகம் தீரும். இங்க நாம பல பேர்…

  சொல்லாமலே புரிஞ்சுக்கணும்.
  வாயத்தொறந்து சொல்லிதான் சோகம் தெரியணுமா!
  இதெல்லாம் சொல்லி சொல்லி பெருசு பண்ணக் கூடாது.
  சிம்பத்திக்காக சொல்றோம்னு நெனச்சுப்பாங்க.

  இப்படி அசிங்கமான காரணங்கள் சொல்லிக்கிட்டு, அப்புறம் யாருமே என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்கன்னு சுத்தி இருக்கவங்களையெல்லாம் குறை சொல்றவங்க இருக்காங்க. சொல்லுங்க… சோகத்தை சொல்லுங்க. வலியை, வேதனையை சொல்லுங்க. நம்பி சொல்லுங்க அப்படியொன்னும் யாரும் உங்கள அசிங்கமா பார்த்திட மாட்டாங்க.

மேகம் மட்டும் வானமில்லை!
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை!
புலன்களை கடந்துகூட இன்பம் இருக்கும்!

வேற என்ன சொல்ல… வான் தூறல் பெயருக்கு ஏற்ற மாதிரியே உயிரோட்டம்.

(நானே எழுதி முடிச்சதும் டாப் 10 மூவிஸ் ஸ்டைல்ல படிச்சேன்) 

செத்து போச்சு மனசு, கருணாகரன் –

மரமான செடிய
தோளில் எப்படி சுமப்பது!

இந்த வரியில செத்து போச்சு மனசுங்குற மூனு வார்த்தைக்கு பின்னால இருக்க மொத்த பாரத்தையும் சொல்லி முடிச்சுட்டார் பாடலாசிரியர் கருணாகரன்.

அட! நின்னு உறங்கக் கூடத்தான்
இந்த உலகில் இடமில்ல,
மரக்கிளையில் தங்க போனாலும்
அட பறவையும் அங்க விடவில்ல…

தனிமையை பல பேர் பலவிதமா எழுதியிருக்காங்க. தனிமைதான் நிரந்திரம், தனிமைதான் நிஜம்னு வியாக்கியானம் பேசினாலும் தனிச்ச மனசுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தனிமைக்கே உரிய ஒரு ஏக்கம் இருக்கும். அந்த எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் இதைவிட இயல்பா சொல்றது கஷ்டம்.

காக்கா குஞ்சு போல நானும்
கரையாத காலமில்ல,
மரத்தின் கீழ நிக்கும் நீயும்
நிமிர்ந்து கூட பார்க்கவில்ல!

ஒன்னு கவனிச்சீங்களா, இந்த வரிய கேட்கும்போது நாம எல்லாருமே நம்மள ஏக்கத்தோட இருக்க காக்கா குஞ்சோட இடத்துலதான் வச்சு பார்ப்போம். யாருக்குமே நாம நிமிர்ந்து பார்க்காத ஆளா இருந்த பொழுதுகள் முதலில் நினைவுக்கு வராது. ஏன்?

இங்க எல்லாருமே ஏங்கிப் போயிருக்கோம்! தனித்தனியா ஏங்கிப் போயிருக்கோம்.
என்ன ஒரு தாக்கம், என்ன ஒரு உண்மை என்ன ஒரு விஷுவல் இமேஜ் இருக்கு பாருங்க.

விடியாது என்கிற போதும்
நான் கிழக்கையே பார்க்கிறேன்

ஒரு மூட்டை சோகத்தை சொமந்துக்கிட்டு கண்ணுல சிரிப்போட சந்தோஷம்; ரோட்டோரமா நிக்குற நம்மள நோக்கி நடந்து வந்தா எப்படி இருக்குமோ அப்படி ஒரு பாட்டு. மாபெரும் சோகத்த கடந்து ஒரு அமைதியும் அதைத்cதொடர்ந்து ஒரு தெளிவும் வந்த நிலையில ஒரு உணர்வு இருக்கும்.
மது ஒரு லேசா சிரிச்சுக்கிட்டே படியிருப்பாங்களோன்னு கூட தோனுது எனக்கு.

குடைகளை கண்டு மழையும்
வானில் நிற்காதே,
தடைகளை கண்டு வாழ்க்கை
பாதியில் முடியாதே!

செத்து போச்சு மனசுன்னு ஆரம்பிக்குற இந்தப் பாட்டு எனக்கு பேரதிசயம், பேராச்சரியம்.. எல்லாம்.

கண்ண மூடிட்டு இந்தப் பாட்ட கேட்டா லேசா ஒரு சின்ன சிரிப்பு ஒன்னு வருது. அந்த நேரத்துல நம்ம முகத்த பார்த்தால் வலியே வலிய வந்து நம்ம கிட்ட வந்து மன்னிப்பு கேட்டுட்டு போயிடும்னு நினைக்கிறேன்.

மறுபடியும் சொல்றேன்…

செத்து போச்சு மனசுன்னு ஆரம்பிச்சு மெல்ல துடிக்கும் மனசுன்னு முடியுற இந்தப் பாட்டு எனக்கு பேரதிசயம், பேராச்சரியம்.. எல்லாம்.

பேரன்பு படத்துல இருக்க நாலு பாட்டும் தனிமை, சோகம், வலி, வெளிச்சம், நம்பிக்கைனு நம்ம படும் பாட்ட பாடுற பாட்டு. இந்த எல்லா பாடல்களுக்கும் இருக்க ஒரு ஒற்றுமை என்னன்னா, ஒரு வரியிலாவது நம்மள சட்டுன்னு கைப்பிடிச்சு கூடவே கூட்டிட்டு போயிடும்!

வார்த்தைகளுக்கு தன் இசையால் உயிர் சேர்த்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் அமைதியாக நல்ல பாடல்களை கொடுத்து வருவது ரொம்பவே மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற நல்ல எண்ணங்கள் வரிகளாவதற்கும், பாடல்களாவதற்கும் நிச்சயம் இயக்குனர் ராமிற்கு பல பேர் சொல்லும் நன்றிகளோடு என் நன்றிகளும்.

யுவன் ஷங்கர் ராஜாவிற்கென்று என் மனதில் ஒரு இடம் எப்போதும் இருக்கிறது. அந்த இடத்துல வேற யாருக்கும் இடமில்ல. So, Yeah! Yuvan is here in a very special place. If someone is waiting with an expectation to occupy that space. No. It won’t happen. Go back! 🙂

தரமணி படத்தின் ‘யாரோ உச்சிக்கிளை மேலே’ பாடலில் ‘பேரன்பின் ஆதி ஊற்று’ என்று ஒரு வரி உண்டு. ஒவ்வொரு முறை அந்த வரியை கேட்கும்போதும் ஏதோ உலகத்துல இருக்க எல்லா வகையான கொடிய எண்ணங்களும் ஒரு காத்து வந்து கொண்டு போயிட்டது மாதிரி ஒரு நிம்மதியும் அமைதியும் நிறையும்.

பேரன்பு படத்தின் பாடல்கள்.. பேரன்பின் ஆதி ஊற்றா,

கொடிய எண்ணங்களை கொண்டு செல்லும் காற்றா என்று என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் நல்லதுதானே… 

Why I did not thank Madhan Karky on Twitter!

நான் எழுதிய ‘உசுரே’ (USUREY) பாடலை மதன் கார்க்கி வெளிட்டதற்காக நன்றி தெரிவித்து புகழ்வதற்கான பதிவு அல்ல இது! இது கதை…ஒரு சின்ன கதை.

காலேஜில் ஒரு சீனியர், எப்போதும் எல்லோரையும் ஊக்குவிக்கும் ஒரு சீனியர், (எல்லா காலேஜிலும் இப்படி ஒரு சீனியர் இருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்) என்னை மேடையேற்றி ஆடவைத்த, பாடவைத்த, நடிக்கவைத்த, எழுத வைத்த என் மரியாதைக்குரிய சீனியர் அவர்.

மதன் கார்க்கி என்றாலே அப்போது இரும்பிலே ஓர் இருதயம் பாடலின் ‘என் நீலப் பல்லாலே உன்னோடு சிரிப்பேன்’ வரிதான் அடையாளம். மதன் கார்க்கி எழுத அரம்பித்த கொஞ்ச நாளிலேயே, எழுதிக்கிட்டே இரு மாதேவா என்று உரிமையோடு சொல்லி வளர்த்த அந்த சீனியர் வாயில் எப்போதும் மதன் கார்க்கி கதைதான்! புகழாரங்களை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிபவர் எப்போது கேட்டாலும் சட்டென்று கதை கதையாய் எடுத்து விடுவார்.

காலேஜ் ஹாஸ்டலில் என் மாலைவேளைகளும் இரவுகளும் பெரும்பாலும் சீனியர்களோடுதான். சிறுகதை, சீனியர் பொண்ணு, புதிதாய் வெளிவந்த சின்ன பட்ஜெட் படம்னு எதாவது பேசிக்கோண்டே இருப்போம். அப்படி ஒரு நாள், என்னை மேடையேற்றி அழகு பார்த்த அந்த சீனியரோடு பேசிக்கொண்டிருந்தபோது… ஒரு பென்சில் எடுத்து சுவற்றில் ‘மதன் கார்க்கி’ என்றெழுதி

‘மாதேவா! கார்க்கி மாதிரி வரணும். பெரிய ஆளுடா இந்த மனுசன்’

என்று சொன்னார். (இப்போதும் அந்த உரையாடல் அப்படியே அந்த சீனியர் குரலில் பத்திரமாக இருக்கிறது என்னோடு) அந்த இரவு, அந்த சீனியர், அந்த உரையாடல்… அப்படியே அங்கிருந்து சில வருடங்கள் கழித்து மதன் கார்க்கி நான் எழுதிய ஒரு பாடலை வெளியிடுகிறார்.

Madhan Karky

அந்த சீனியரிடம் நான் வாயெல்லாம் சிரிப்போட அனுப்ப ஒரு ஸ்க்ரீன்ஷாட் கொடுத்திருக்கார் மதன் கார்க்கி. நன்றி!

காதலில் சொதப்புவது எப்படி’ வந்திருந்த நேரம். ‘அழைப்பாயா’ பாடல் தனது ஐம்பதாவது பாடல் என்று மதன் கார்க்கி ஒரு இன்டர்வியூவில் சொன்னதாக ஞாபகம் இருக்கிறது. நான் நியூஸ்பேப்பரில் அந்த இன்டர்வியூ படித்ததும், படித்துவிட்டு அடித்து பிடித்து அந்த சீனியரிடம் காட்டியதும் இன்றும் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது. அழைப்பாயா முதல் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த பாகுபலி வரை சினிமாவில் ஒரு பக்கம் வேகமாய் பயணித்தாலும் Karky Research Foundation மற்றும் Doo Paa Doo வழியே இசைக்கும் தமிழுக்கும் அவரது பங்களிப்புகள் என்னை பொறுத்தவரை ஈடு இணையில்லாதது.

இவ்வளவு வேலைகள் இருக்கும் போதும்… எப்போது மெசேஜ் செய்தாலும் நிச்சயம் ரிப்ளை வரும். எப்போது அழைத்தாலும் பேச நேரம் ஒதுக்கியிருக்கிறார்.
நான் எழுதிய பாடலை (USUREY) ‘நீங்க ட்விட்டர்ல வெளியிட்டா ரொல்ப சந்தோஷமா இருக்கும்’ என்று நான் கேட்ட போது, உடனே சம்மதித்தது மகிழ்ச்சியளித்தது.

கேட்டதும் சம்மதித்த,
குறித்த நேரத்தில் ட்வீட் செய்த,

YT Comment
கேட்காமலேயே YouTubeல் ‘உசுரே’ (USUREY) வீடியோவில் கமென்ட் செய்த மதன் கார்க்கிக்கு ஒரு ட்வீட்டில்.. 240 கேரக்டர்களில் நன்றி சொல்வது நியாமில்லை.

அதனால், மதன் கார்க்கி என்ற பெயரோடு என் கூடவே இருக்கும் ஒரு கதை சொல்லி நன்றி சொல்ல நினைத்தேன். சொல்லிவிட்டேன்… நன்றி!

Seven Times Vairamuthu Gave Out SPOILERS In His Lyrics!

Note: Even if you don’t have the patience to read all seven read the final one — because that’s just Vairamuthu exhibiting unimaginable levels of creativity.

A master at narrating stories with his verses, Vairamuthu has always astonished me with the way he places ‘story easter eggs’ in his lyrics. This article chronicles some of the times when Vairamuthu’s lyrics have succinctly summarised stories in a couple of lines, describing the characters and conveying their mood.

(Confession – Concept & Content only me. Writing and all done by Ashameera Aiyappan)

VAAGAI SOODA VAA (2011) 

The film is about an impoverished, educationally deprived village and a teacher who is placed there. The objective of Vaagai Sooda Vaa was to communicate the change that education can bring — that proper education leads to development; to show how the people who have almost lost faith in God see the teacher who imparts education as the arrival of Almighty himself.

‘ஆ’னா ‘ஆ’வன்னா ‘இ’னா

அதை அறிவிக்க வந்தவன் ஆண்டவனா!

— ‘ஆ’னா ‘ஆ’வன்னா, வாகை சூடவா.

KAATRU VELIYIDAI (2017) 

Kaatru Veliyidai is a film that spends more time making us understand its characters. The film places its people at the core and revolves around their reactions to situations. While Mani Ratnam tried to convincingly explain the various moods and hues of VC, he wasn’t successful to a dominant section of the audience. However, Vairamuthu helps us understand VC and by extension the film itself with this line. (To no effect, because we want our stories told and not sung). Indulge me and listen to the line again — no one else can articulate a self-obsessed character like VC better.

கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான்

காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்!

— வான் வருவான், காற்று வெளியிடை.

PARADESI (2013)

Kangaani, one of the antagonists, personifies cruelty in this Bala film about poverty, migration, and betrayal. Kangaani’s false promises become the reason for the people to leave their barren village. Vairamuthu conveys Kangaani’s deception and the pain Paradesi embodies in a single line where he compares him to a wolf and people to crabs.

கங்கானி பேச்ச நம்பி சனம் போகுதே

நண்டுகள கூட்டிக்கொண்டு நரி போகுதே!

— செங்காடே, பரதேசி.

Trivia: While recording the song, the second line was changed into ‘Kandrugala Kootikondu Nari Pogudhey’ for poetic effect. An infuriated Vairamuthu reasoned that crabs are a natural target to ravenous foxes. Changing crabs to calves will depict a phenomenon that doesn’t happen in real life, marring the realism of the song.

RAAVANAN (2010)

The protagonist Veera comprehends that his attraction for Ragini is not ‘right’. He also acknowledges that this ‘fondness’ is complicated and uncharacteristic for him. He realises that this woman will be a determinant of his fate and yet, he doesn’t stop. And Vairamuthu silently gives us a spoiler about the film’s climax in the song Kaatu Siruki.

ஒன்ன முன்ன நிறுத்தி

என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி!

— காட்டு சிறுக்கி, ராவணன்.

PADAIYAPPA (1999)

Despite a few errant story arcs, Padaiyappa mainly revolves around the toxic, all-consuming love that Neelambari cherishes for the eponymous lead. The film is an encapsulation of how Padayappa responds to the following statement, a clear indication of Neelambari’s demands. This verse neatly puts the film’s dynamics in context.

வானம் வந்து வளைகிறதே

வணங்கிடவா!

— மின்சார கண்ணா, படையப்பா.

SANGAMAM (1999)

Can one form or art be ‘better’ than the other? How is your art better than mine? Who decides the conventional hierarchy in the various forms that art dwells? These questions fuel the conflict between Sivasankara Moorthy (Vijayakumar) and Avudapillai (Manivannan) who are successful in their respective art forms. While caste and money, the usual suspects, do play the devil, it is this artistic difference that significantly spoils the equation between the two families. The film also deals with a possibility where the holistic nature of art helps the lovers come together. And Vairamuthu gives us this killer verse…

காதல் ஜோதி கலையும் ஜோதி…

ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்!

— மார்கழி திங்கள் அல்லவா, சங்கமம்.

Damn! The next one is special and blows my mind every single time.

JEANS (1998)

In a stroke of genius, Vairamuthu uses an element from Tamil grammar as a metaphor to describe the identical twins. In this line, Vairamuthu beautifully describes the crux of Jeans — the chaos and the drama that stems from twin identities.

சலசல சலசல ரெட்டைக்கிளவி

தகதக தகதக ரெட்டைக்கிளவி

உண்டல்லோ… தமிழில் உண்டல்லோ!

பிரித்து வைத்தல் நியாயம் இல்லை

பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை

ரெண்டல்லோ… ரெண்டும் ஒன்றல்லோ!

— கண்ணோடு காண்பதெல்லாம், ஜீன்ஸ்.

This verse is special as it makes me wonder how Vairamuthu got the idea to juxtapose Tamil’s Irattai Kilavi with identical twins! And no, he wasn’t smoking anything when he wrote any of these songs. So, Stop telling me that smoking up helps one to be more creative!

This list ends here and I have listed seven songs not because Vairamuthu received seven National awards. He isn’t who he is due to the awards. He is THE ‘Vairamuthu’ because he made people read, listen, and most importantly, inspired them to write.

From Silence to Sex! Emotions. Words. And Vairamuthu!

15 Times when Vairamuthu chose simple and best words to convey our day to day emotions.

நம்ம மனசுல இருக்கும் உணர்வுகளுக்கு.. சொல்ல நினைக்குற உணர்வுகளுக்கு.. எப்படி சொல்றதுன்னு தெரியாத உணர்வுகளுக்கு.. எப்படி சொன்னாலும் நெனச்ச அளவு சொல்ல முடியலையேன்னு நாம நினைக்குற உணர்வுகளுக்கு வைரமுத்து வார்த்தைகள் கொடுத்தபோது…

வறுமை –

உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே

வயிரோடு வாழ்வதுதானே பெருந்துன்பமே!

And

புளியங்கொட்டைய அவிச்சு தின்னுதான் பொழச்சு கெடக்குது மேனி,

பஞ்சம் பொழைக்கவும் பசிய தீர்க்கவும் பச்ச பூமிய காமி!

⁃ செங்காடே, பரதேசி

பசி –

அய்யனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம்,

சொரணகெட்ட சாமி சோத்ததான கேட்டோம்!

⁃ செங்கசூளைகாரா, வாகைசூடவா.

பயம் –

ஒட்டக முதுகின் மேல் சமவெளிகள் கிடையாது,

டாலர் உலகத்தில் சம தர்மம் கிடையாது!

⁃ துப்பாக்கி எங்கள் தோளிலே, விஸ்வரூபம்.

காத்திருத்தல் –

அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையல் ஆகவே துரும்பென இளைத்தேன்..

அந்த மோதிரம் ஒட்டியானமாய் ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன்!

⁃ செளக்கியமா, சங்கமம்.

அமைதி –

ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே!

⁃ நெஞ்சுக்குள்ள, கடல்.

அழுகை –

அந்தக் குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே!

⁃ எவனோ ஒருவன், அலைபாயுதே.

ஆசை –

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்,

நடைபாதை கடையில் தேனீர் குடிப்பேன்!

⁃ மார்கழி பூவே, மேமாதம்.

காதல் –

வில்லும் அம்பும் சேர்ந்தாலும் சேர்ந்தே வாழ்வதும் இல்லை

சொல்லும் பொருளும் ஆனோமே

என்றும் பிரிவே இல்லை.

ரோஜா கடலே, அனேகன்.

இயல்பு –

ஈசன் எழுதிய ஓலைகளில்

அக்கால காதல் உருவாகும்,

ரேஷன் எழுதிய அட்டைகளில்

தற்கால காதல் உருவாகும்.

⁃ குறுந்தொகை, இடம் பொருள் ஏவல்.

வேண்டுதல் –

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே…

என்னையும் கவிஞன் ஆக்காதே!

⁃ குல்மொஹர் மலரே, மஜ்னு.

பிரிவு –

பிரிவொன்று நேருமென்று தெரியும் கண்ணா,

என் பிரியத்தை அதனால் நான் குறைக்க மாட்டேன்.

சரிந்து விழும் அழகென்று தெரியும் கண்ணா,

என் சந்தோஷ கலைகளை நான்

நிறுத்த மாட்டேன்.

⁃ தீரா உலா, ஓகே கண்மணி

ஊடல் –

ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி

ஹலோ சொல்லி கைகொடுக்க தங்க முகம் கருகிவிட்டாள்!

– தனியே தனந்தனியே, ரிதம்

மோகம் –

குமரியின்வளங்கள்குழந்தையின் சினுங்கல்முரண்பாட்டு மூட்டை நீ!

– வாஜி வாஜி, சிவாஜி

காமம் –

வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்,

ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்!

– அய்யங்காரு வீட்டு அழகே, அந்நியன்

வெட்கம்-

பாடுபட்டு விடியும் பொழுதில் வெளியில் சொல்ல பொய்கள் வேண்டுமடி!

⁃ சாரட்டு வண்டில, காற்றுவெளியிடை

BONUS!

Last but not the least!

Most Important…

எதிர்பார்ப்பு –

உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதீக…

⁃ சுத்தி சுத்தி வந்தீக, படையப்பா.

NAMES IN THE WORLD OF KAALA!

ரஜினி அறிமுகக்காட்சி. தாராவியில் ஒரு அவசரம். ஒரு பதற்றம். ஒரு காவல் வேண்டும். அவனின் குரல் வேண்டும். அவனின் துணை வேண்டும். நாயகனுக்கு செய்தி சொல்ல ஓடுகிறான் ஒரு இளைஞன். நாயகன் வருகிறான்.

படம் பார்த்த சில பேருக்கு ஆர்பாட்டங்கள் இல்லாததால் பிடித்திருந்தது. சிலருக்கு இருக்க வேண்டிய அளவுக்கு ஆர்பாட்டங்கள் இல்லை என்று தோன்றியது.

எனக்கு.. கருத்து தெரிவிக்கும் நிலையிலேயே நான் இல்லை!

ஏன்?

ரஜினி அறிமுகக்காட்சி. தாராவியில் ஒரு அவசரம். ஒரு பதற்றம். ஒரு காவல் வேண்டும். அவனின் குரல் வேண்டும். அவனின் துணை வேண்டும். நாயகனுக்கு செய்தி சொல்ல ஓடுகிறான் ஒரு இளைஞன்..

‘டேய் பீம்ஜி! நில்லுடா’ என்று அவனை மற்றொருவன் நிறுத்த முயன்ற நொடியில்.. நாயகனை அழைத்து வர விரைவது பீம்ஜி என்று அறிந்த நொடியில் சரணடைந்தேன் பா.ரஞ்சித் எனும் கொள்கையாளனிடம்.

அடுத்த ரெண்டு மூனு நிமிஷத்துக்கு slow-motion, கறுப்பு ஜீப் எதுவும் பெரிதாக தெரியவில்லை.

ஆரம்பத்திலேயே ஒரு பெயர் என் கவனம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதால், பெயர்களை உற்று நோக்கத் துவங்கினேன்!

புயல் :

போலீஸ்காரர்கள் அவள் ஆடையில் கை வைத்த போதும் நடுங்காமல் நிமிர்ந்து திமிரி நின்ற.. கீழாடையை கழற்றிய போதும் அஞ்சாமல் அடிப்பதற்கு தடியெடுத்த புயல்!

பெயருக்கேற்ற மாதிரி எதிரில் எவர் நின்றாலும் தன் வேகத்தில் எந்த மாற்றமும் காட்டாத புயல்.

குரலில். பார்வையில். எண்ணத்தில். வேகத்தில். புயல் ஒரு முன்மாதிரி!

லெனின் :

‘உனக்கு லெனின்னு பேரு வச்சுட்டேன் திட்ட கூட முடியல’ என்று கரிகாலன் உரிமையோடு கோபிக்கும் கரிகாலனின் மகன். பெயருக்கேற்ற மாதிரி தானும் தன் மக்களும் விழித்திருக்க வேண்டுமென விருப்பம் கொண்டவன்.

‘ஊர சுத்தப்படுத்துறேங்குற பேருல சேரிய மட்டும் சுத்தம் செஞ்சுட்டா ஊரு சுத்தமாகிடுமா?’ இப்படி சுத்தமான கேள்விகளை சுமந்து திரிபவன்.

(லெனின் வீட்டை விட்டு வெளியேறும் முன் கரிகாலனோடு, தன் அப்பாவோடு பேசும் காட்சி தேவர் மகன் மறுபடி பார்த்த உணர்வு தந்தது.)

ஹரி’தாதா :

Born to rule என்று ஒவ்வொரு முறை சொல்லும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருக்கும் ஹரி. பக்கத்தில் ராமர் சிலை. தண்டகாரன்ய நகரை ஆண்டு அழிப்பவன்.

‘வெள்ளையுஞ் சொல்லையுமா இருந்து என்ன! நம்ம வீட்டு தண்ணியே குடிக்க மாட்டேங்குறான்…’ என்று கரிகாலனின் மனைவி செல்வி சரியாக புரிந்து கொண்ட அதிகாரக் காதலன்!

மும்பையை சுத்தப்படுத்தும் PURE MUMBAI என்னும் திட்டத்தின் பேரில் தாராவியை மொத்தமாய் கூட்டிப்பெறுக்கி கூறு போட்டு விற்கத் துணிந்தவன். ‘MANU BUILDERS’ (மனுதர்ம சாத்திரம்) கொண்டு கண்துடைப்பு செய்ய நினைப்பவன்.

அதனால், கரிகாலனின் கோபத்துக்கு ஆளானவன்.

காலா (கரிகாலன்) :

மேசையில் இராவண காவியம். எப்போதும் பக்கத்தில் நண்பன் ‘வாலி’யப்பன். அவன் நாயின் பெயர் கூட ‘ஆசாமி’தான். ஹரியை வீழ்த்த வந்த அசுரகுலத் தலைவன். மண்ணுக்காக மக்களுக்காக மகனையும், அன்பு காதலியையும் எதிர்த்த கொள்கையாளன். மக்கள் பலத்தோடு ராமராஜ்ஜியத்தை கிழித்தெறிந்த இராவணன்.

எத்தனை பரபரப்புக்கு மத்தியிலும்.. அமைதியாக ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ புத்தகம் படிப்பவன்.

‘பொம்பளைங்கதான் கரண்டி பிடிக்கணும்னு இருந்துடாதீங்கப்பா’ என்று போகிறபோக்கில் சமத்துவம் தூவிச் செல்லும் புரட்சியின் முகம்.

‘காலாவா? இங்கதான் புத்தர் கோயில்ல உக்காந்திருப்பார்’ என்று மக்கள் நம்பும் காவலன்.

எண்ணத்தால்.. அழிவின்றி காலாவதியாகாமல் என்றும் வாழ்பவன் இந்த காலா.. கரிகாலன்!

ஹரிதாதாவின் வீட்டில் தண்ணீர் குடித்து.. டம்ளரில் வாய் வைத்து தண்ணீர் குடித்து, அவன் காலை தொட்டு மன்னிப்பு கேட்க மறுத்து வெளியேறும் போது.. ‘வேணும்னா முதுகுல குத்திக்கோ!’ என்று மூன்று வார்த்தைகளில் ஹரியின் வாட்கூர்மையை மிஞ்சி நடந்த போது சிலிர்த்தே போனேன்.

சிவாஜி ராவ் கேக்வாட் – என்னை பெருமளவில் யோசிக்க வைத்த பெயர்!

‘இந்தப் பெயர் கொண்ட கேரக்டரை கொன்றதன் மூலம் என்ன சொல்ல வர்றீங்க ரஞ்சித்?’ என்று அவரிடம் கேட்க ஒரு கேள்வி கொடுத்த பெயர். கேரக்டரை மட்டுமல்ல படம் முழுக்க சூப்பர் ஸ்டாரை, அந்தப் பெயரைச் சுற்றி தொத்திக் கிடக்கும் பிம்பங்களையும் வழக்கங்களையும் கொன்று தீர்த்திருக்கிறார்
பா. ரஞ்சித்.

மனிதர்களோ, நாயோ, திட்டங்களோ.. பெயர்கள் எல்லாம் பெயர்க்காரணங்களோடு!

எனக்கும் கூட பல இடங்களில் தோன்றியது. தன்னுள் இருக்கும் சிந்தனையாளனுக்கு படைப்பாளியைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் பா.ரஞ்சித். ஆமாம். உண்மைதான்! அது எனக்கொரு குறையாக தெரியவில்லை என்றாலும் பிறரிடம் விவாதிக்கும்போது சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.. அப்போதுதான் நண்பர் ஒருவர், கான்ஸ் திரைப்பட விழாவை நிறுத்தக்கோரி 1968ல் நடந்த ஒரு போராட்டத்தில் Godard சொன்னதை பா.ரஞ்சித்தோடு ஒப்பிட்டு Facebookல் பதிவு செய்தார்..

 

இதுதான் சினிமா என்ற உங்களின் வரைமுறைகளை உடைப்பதால் படம் பிடிக்கவில்லை என்றால்..
ரஞ்சித் இராவணன்!

The Shell Of LOVE!

Two people in close contact in their own small world with higher level of
Consciousness!
They are here. They are not here!
They are in an attached detachment with this world. In their own shell. With of course a lot of strings attached!
But for them, Love doesn’t suffocate. It doesn’t restrict. It just creates a zone where they can always come back & be themselves. For them love (The shell) is like a mother’s womb. It gives them all the strength to face & fight this vast world. Love is just the same!
For them the shell has everything in it.
It cultivates compassion. Improves consciousness. Intensifies emotions. Inculcate awareness. Stimulates the urge to live. Gifts the priceless warmth. Assimilating happiness… From comfortable silences to the soulful love making it has everything in it!

With every touch, with every move, with every breath the shell becomes stronger & more vibrant.
The shell is not a restriction. The shell is not a constraint. No longer a cage. It won’t stop them from doing what they love. It won’t be a hurdle. It saves them. It embrace them no matter what.

For those two souls, it is HOME. As simple as that! A home that has all the love of the universe in it! It is aware of all their worldly experiences & gives them back the needed wisdom. It absorbs all their wants & emits energy in the form of happiness & support!
It shapes them – Physically & Mentally.
It will give them the time they need to fall in love again & again. And the freedom to not be in love at times.
The shell is their breathing space. Love is their breathing space. It connects them with the universe through each other. They share not just the love.
They share ultimate form of consciousness in that shell and hence they become lighter, appear lighter to the rest of the world.

Let the world be filled with more such shells of light & love.

******
அந்த உணர்வு மாளிகையில் வேறெவருக்கும் அனுமதி இல்லை. இராட்சத அமைதியில் இருவர் மட்டும் சத்தம் போட்டு சிரித்துச் சங்கமிக்கும், உணர்வு மாளிகை அது! விரல்களும் கைகளும் கால்களும் சதைகளும் பின்னிப் பிணைந்திருந்தாலும், காதலும் காமமும் கட்டிப்புரண்டு குழப்பியெடுத்தாலும், உடல் துவங்கி உள்ளம் வரை அவரவரை அவரவர் இழந்தாலும்… அவர் அவராய் வாழும் ஓரிடம் காணும்போது உரு கொள்கிறது இந்த மாளிகை!

அம்மாளிகையில் லயித்து, அதில் நிறைந்திருக்கும் உணர்வோடு இழைந்து, அவர்கள் மகிழ்ந்துருகும் பொழுதுகளால்தான், உலகின் இரவுகளில்… நமக்கு காதல் மீதொரு நம்பிக்கையும், விடியல்களில்… வாழ்வின் மீதொரு பிடிப்பும், பிறக்கிறது!