அவசியமில்லை!

இன்னைய தேதிக்கு எதை எடுத்தாலும், திண்பண்டங்கள் அழகு சாதனங்கள் ஆடைகள் கேட்ஜெட்டுகள் என எதுவாயிருந்தாலும், எண்ண முடியாத அளவுக்கு வகைகள், பிரிவுகள் இருக்கின்றன. இந்த ‘சாய்ஸ்’ என்ற ஒரு வார்த்தை மேற்கத்திய சொசைட்டிக்களை அதன் மார்க்கெட்டுகளை புரட்டி போட்டுவிட்டு இப்போது உலக மார்க்கெட்டையும் வேகமாக புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
வெரைட்டிக்கள் அதிகரிப்பதால் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அதிகமாகிறது என்ற ஒரு கான்செப்டை பிரகடன படுத்தி பல கம்பெனிகள் தங்களது மார்க்கெட்டை பெரிதாக்கியத்தோடு, மக்கள் மத்தியில் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று நாம் வாழும் மல்டிபில் சாய்ஸ் உலகத்தில் மக்கள் தங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுப்பதில் சந்திக்கும் குழப்பங்களையும், தேர்ந்தெடுத்த பின்னர் சந்திக்கும் பக்க விளைவுகளையும் Barry Schwartz மற்றும் Sheena Iyengar, இருவேறு கோணங்களில் விவரிக்கின்றனர்.
அவர்கள் நாம் நல்லதென்று நினைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் அடுக்குகள் நம்முள் ஒரு அழுத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.
இந்த பாதிப்புகள் அதிகம் பேசப்படாதவை, உணரப்படாதவை.இந்த வீடியோக்களை பார்த்த பிறகுதான் நமக்கு சுருகென்று தலையில் ஏறும். ‘ஆமாம்! எனக்கு கூட அப்பப்போ தோணும்.’ என்று.   
இதனை தவிர்க்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம் இருந்தும் நம் கண் முன் வைக்கப்படும் நூற்றுக்கணக்கான சாய்ஸ்களில் பெரிதாக ஒரு வித்யாசமும் இல்லை. ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை எடுத்துவிட்டால் அவை அனைத்தும் ஒன்றுதான் என்றும், பிடித்ததை தேர்ந்தெடுப்பதில் இத்தனை அழுத்தம் அவசியமற்றது என்றும் சொல்கிறார்கள்.
இது அந்த மாடல், இது இந்த டிசைன், இட் இஸ் டிஃபரெண்ட், என்று பெருமை பேசிக்கொள்ளும் நமக்கு அவர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் அதுதான் உண்மை. வீடியோக்களை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.   

ஷீனா ஐயங்காரின் The Art Of Choosing என்ற TED வீடியோவை காண…
http://www.youtube.com/watch?v=lDq9-QxvsNU

பேரி ஸிச்வர்ட்ஸின் The Paradox Of Choice-Why More Is Less என்ற TED வீடியோவை காண…    
http://www.ted.com/talks/barry_schwartz_on_the_paradox_of_choice.html